இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கான சக்தியும் மன உறுதியும் லாரன்ஸ் மாஸ்டரிடம் உள்ளது… SJ சூர்யா புகழாரம்…

SJ சூர்யா தமிழ் திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். SJ சூர்யா இயக்கிய முதல் திரைப்படம் ‘வாலி’. இந்த திரைப்படத்தில் அஜீத்குமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர். அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் மற்றும் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலில் நடித்து நடிகை ஜோதிகா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது முதல் திரைப்படமே SJ சூர்யா அவர்களுக்கு வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அடுத்ததாக விஜய் மற்றும் ஜோதிகாவை வைத்து ‘குஷி’ திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மாபெரும் வெற்றியடைந்தது.

அதை தொடர்ந்து ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’, ‘வியாபாரி’, ‘நியூட்டனின் மூன்றாம் விதி’, ‘நண்பன்’, ‘இறைவி’, ‘மெர்சல்’, ‘மாநாடு’, ‘டான்’, ‘மார்க் ஆண்டனி’ ஆகிய திரைப்படங்கள் SJ சூர்யா நடித்ததில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும். குறிப்பாக ‘டான்’, ‘மார்க் ஆண்டனி’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் SJ சூர்யாவின் நடிப்பு ரசிக்கும் படியாக இருந்தது மற்றும் மக்களிடம் இருந்து னால விமர்சங்களும் பெற்றது.

இந்நிலையில் லாரன்ஸ் மாஸ்டர் இயலாதவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தை விரிவுபடுத்த ‘மாற்றம்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். இன்று அதற்க்கான ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். அதில் கலந்துக் கொண்ட SJ சூர்யா லாரன்ஸ் மாஸ்டரை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், நம் எல்லாருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு தடவை செய்வோம் இரண்டு தடவை செய்வோம் ஆனால் லாரன்ஸ் மாஸ்டர் தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக சேவை செய்து வருகிறார். இது எல்லோராலும் முடியாது, அவர் மனதில் அந்த சக்தியும் சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியும் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் உதவி செய்ய முன்வருபவர்களை நேரடியாக உதவி தேவைப்படுபவர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களது கையாலே செய்ய வைக்கிறார். நானும் அவரது இந்த சேவை பணியில் இணைந்து என்னால் முடிந்த 10 இலட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளேன். மேலும் தொடர்ந்து அவருடன் இணைந்து பயணித்து சேவை செய்ய போகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் SJ சூர்யா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews