ஹிட்டாகும் என எதிர்பார்த்த பாடல்.. ஹிட்டாகாததால் விஜய் படத்தில் போட்டு ஹிட் கொடுத்த விஜய் ஆண்டனி.

தமிழ் சினிமாவில் அதிரடி இசைக்குச் சொந்தக்காரர்தான் விஜய் ஆண்டனி. இவரது பாடல்களைக் கேட்டாலே தானாகவே வைப் ஏறியது போல் ஒரு உணர்வு ஏற்படும். எழுந்து ஆட வைக்கும். தனது அதிரடி இசையில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். புரியாத வார்த்தைகளை பல்லவியாக்கி அதனையும் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தவர்.

மெலடி பாடல்களில் கூட ராக் இசையைப் பயன்படுத்தி அதிர வைப்பவர். இப்படி இசையுலகில் தனக்கென தனிபாணியைக் கடைப்பிடித்து வரும் விஜய் ஆண்டனி தற்போது நடிகராகவும் நான், சலீம், பிச்சைக்காரன் என சமீபத்திய ரோமியோ படம் வரை ஜொலித்து வருகிறார்.

சமீபத்தில் இவரது மகள் மறைந்த போதும் அந்த சோகங்களைக் கடந்து தற்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி மறுபடியும் திரையில் சுழன்று வருகிறார். மேலும் சமீபத்தில் கூட ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என கூறி பரபரப்பைக் கிளப்பினார். இப்படி இசை, நடிப்பு, சமூகம் என பிஸியாக இருக்கும் விஜய் ஆண்டனி ஒரு பாடலை கண்டிப்பாக ஹிட் ஆகும் என நினைத்து இசையமைத்திருக்கிறார்.

அஜீத் படத்தின் கிளைமேக்ஸ்-க்கு வந்த சிக்கல்.. தடைகளைத் தாண்டி 175 நாட்கள் ஹிட் ஆன அதிசயம்

அந்தப் பாடல்தான் அ, ஆ, இ, ஈ என்ற திரைப்படத்தில் வந்த மேனா மினுக்கி.. மேனா மினுக்கி.. என்ற பாடல். இந்தப் பாடலில் நவ்தீப், அரவிந்த் ஆகாஷ், சரண்யா மோகன், மோனிகா ஆகியோர் நடித்திருப்பர். இந்தப் பாடல் மிகவும் ஹிட்டாகும் என எதிர்பார்த்திருந்த விஜய் ஆண்டனிக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

எனவே இதே மெட்டினை விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் என் உச்சி மண்டையில சுர்ருங்குது.. என்ற பாடலில் பயன்படுத்தி இருப்பார். இவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக விஜய், அனுஷ்காவின் அசத்தல் நடனத்தில் இந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆனது.

மேலும் இதே போன்று நினைத்தேன் வந்தாய் படத்தில் பனராஸ் பட்டுக் கட்டி பாடலும், உசுமு லார்சே போன்ற பாடல்களும் அவர் ஹிட் ஆகும் என்றே நினைக்கவில்லையாம். அந்த பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி விஜய் ஆண்டனியின் பேவஃரிட் பிளே லிஸ்ட்டில் இணைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...