2007 டி 20 உலக கோப்பைக்கும்.. 2024 டி 20 உலக கோப்பைக்கும் இருக்கும் ஒரே ஒரு வியப்பான கனெக்ஷன்..

ஐபிஎல் போட்டிகள் முடிந்த அடுத்த ஒரு வாரத்தில் டி 20 உலக கோப்பை ஆரம்பமாக உள்ளதால் அனைத்து அணிகளுமே மிகவும் தீவிரமாக இதற்காக தயாராகவும் திட்டம் போட்டுள்ளனர். இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று நெருங்கும் சமயத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் டி 20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் ஆடாமல் விலகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற அணிகளும் கூட இதே முடிவை எடுக்கம் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகளில் வெளிநாட்டு வீரர்களை நம்பி இருப்பவர்கள், அவர்கள் விலகும் பட்சத்தில் நிச்சயம் மிகப்பெரிய இழப்பை சந்திப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.

இதனிடையே ரோகித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட வீரர்கள் மற்றும் 4 ரிசர்வ வீரர்களை கொண்ட இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும் நிலையில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் விராட் கோலி, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே உள்ளிட்ட பல வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ள நிலையில் ரிங்கு சிங் பெயர் இல்லாமல் போனது தான் அனைவரையும் கொந்தளிக்க வைத்திருந்தது.

இது தவிர கே எல் ராகுல், நடராஜன், சந்தீப் ஷர்மா உள்ளிட்ட வீரர்களின் பெயரும் இந்த லிஸ்டில் இடம்பெறாமல் போனது அதிகம் கேள்விகளை எழுப்பி இருந்தது. டி 20 போட்டிகளில் இந்திய அணியின் சிறந்த பினிஷராக இருக்கும் ரிங்கு சிங் மற்ற சில வீரர்களுக்கு பதிலாக நிச்சயம் இடம்பிடிக்க தகுதி உள்ள வீரர் ஆவார். ஆனாலும், அவரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யவில்லை.

இப்படி இந்திய அணி அறிவித்த அணிக்கு பின்னர் ஏராளமான விமர்சனங்கள் இருக்க மே 25 ஆம் தேதி வரை அணிகளின் வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான அவகாசத்தை ஐசிசி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் இந்தியாவில் மாற்றம் ஏற்பட்டு ரிங்கு சிங் நிச்சயம் இடம்பெற்றே ஆக வேண்டும் என்பதும் பலரின் விருப்பமாக உள்ளது.

இதனிடையே, 2007 ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலக கோப்பை மற்றும் தற்போது நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பையில் உள்ள ஒரே ஒரு கனெக்சன் பற்றி தற்போது பார்க்கலாம். தோனி தலைமையில் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது. இந்த அணியில் இளம் வீரராக இருந்த ரோகித் சர்மா இடம் பிடித்திருந்தார்.

மேலும் கடந்த 17 ஆண்டுகளில் மிகச்சிறந்த வீரராக மாறியதுடன் கேப்டனாகவும் வலம் வரும் ரோஹித் மட்டும் தான் 2007 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பையில் ஆடி 2024 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பைக்காகவும் ஆடப் போகும் ஒரே இந்திய வீரர். மற்ற அனைத்து வீரர்களுமே ஏறக்குறைய ஓய்வு பெற்றுள்ள நிலையில், ரோஹித்திற்கு கிடைத்துள்ள இந்த கௌரவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...