பாடலில் திடீரென வந்த சந்தேகம்.. இடையில் புகுந்து இரண்டு வரிகளை எழுதி அசத்திய ஹரி

தமிழ் சினிமாவின் மின்னல் வேக டைரக்டர், தயாரிப்பாளர்களின் விருப்பமான இயக்குநர், விறு விறு திரைக்கதை எழுத்தாளர் என சினிமாத்துறையில் அழைக்கப்படும் இயக்குநர் தான் ஹரி. பிரசாந்தை ஹீரோவாக வைத்து தமிழ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். குறிப்பாக சூர்யா, விக்ரம், விஷால் ஆகிய மூவருக்கும் அதிரடி ஆக்சன் படங்களைக் கொடுத்து அவர்களை கமர்ஷியல் நாயகனாக உருவாக்கியதில் ஹரிக்கு தனி இடம் உண்டு. குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டில் படங்களை இயக்கி தமிழ்சினிமாவின் அடுத்த எஸ்.பி.முத்துராமனாக வலம்வருகிறார்.

மேலும் இயக்குநர் ஹரி அவர் இயக்கிய சில படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். அந்த வகையில் விக்ரம்-த்ரிஷா நடிப்பில் கடந்த 21 வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் சாமி. இப்போதுதான் வெளியானது போல் இருக்கும் இந்தப் படம் விக்ரமின் அதிரடி ஆக்சனில் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்களும் இன்றளவும் பிரபலமாக சோஷியல் மீடியாக்களில் வலம் வருகிறது.

இந்தப்படத்தில் நா. முத்துக்குமார் வரிகளில் உருவான ஒரு பாடல் தான் திருநெல்வேலி அல்வா டா.. என்ற பாடல். தமிழ்நாட்டில் இருக்கும் பிரபல பொருட்களை வைத்து எழுதிய இந்தப் பாடலில் இடையில் இரண்டு வரிகள் மட்டும் சரியாக அமைய வில்லையாம். அந்த நேரத்தில் இயக்குநர் ஹரி பாடலில் நாட்டுச் சாலை சர்க்கரை..நீ செக்கு போல சுத்துற.. என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.

ஹிட்டாகும் என எதிர்பார்த்த பாடல்.. ஹிட்டாகாததால் விஜய் படத்தில் போட்டு ஹிட் கொடுத்த விஜய் ஆண்டனி.

இந்த வரிகளைப் பார்த்த நா.முத்துக்குமாருக்கும், ஹாரிஸ் ஜெயராஜுக்கும் இதன் அர்த்தம் புரியவில்லையாம். அதென்ன நாட்டுச்சாலை சர்க்கரை என்று கேட்டுள்ளனர். அப்போது ஹரி நாட்டுச் சாலை என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஓர் ஊர் ஆகும். இங்கு சர்க்கரை தயாரிப்பு மிகவும் புகழ் வாய்ந்தது. மேலும் எனது மனைவி ப்ரீத்தா விஜயக்குமாரின் சொந்த ஊர் அது. எனவே அந்த ஊர் ஞாபகத்திற்கு வரவே இந்த வரிகளை எழுதினேன் என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ஹரி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...