தம்பிக்காக விட்டுக் கொடுத்த அண்ணன் உதயநிதி.. முதல் படமே ஹிட் கொடுத்து அசத்திய அருள்நிதி..

கலைஞர் கருணாநிதி தனது கூர்தீட்டப்பட்ட எழுத்துக்களால் தமிழ்த் திரையுலகில் திராவிடக் கொள்கைகளைப் பரப்பி சினிமாவிலும், அரசியலிலும் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தார். அதனையடுத்து வந்த முதல்வர் ஸ்டாலினும் சில திரைப்படங்களில் நடித்தார். மேலும் திமுகவின் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர்கள் இருவரையும் அடுத்து தற்போது உதயநிதி ஸ்டாலினும் சினிமாவில் ஒருகல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த மாமன்னன் படம் விமர்சனத்திலும், வசூலிலும் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

மேலும் ரெட் ஜெயண்ட் மூவி திரைப்பட நிறுவனம் மூலம் படங்களை வாங்கியும் வெளியிடுகின்றனர். மேலும் இவரது உதயநிதியின் மனைவி கிருத்திகாவும் இயக்குநராக உள்ளார். தற்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க முதன் முதலில் கேட்ட கதை எது தெரியுமா? இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த வம்சம் திரைப்படம் தான்.

இந்தப் படத்தின் கதையை பாண்டிராஜ் உதயநிதியிடம் கூறும் போது இந்தப்பட ஹீரோ, மாடு மேய்க்க வேண்டும், கிராமத்து அடையாளம் இருக்க வேண்டும் என பக்கா கிராமத்து சப்ஜெக்டைச் சொல்ல உதயநிதி அதற்கு இந்தக் கதைக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன். எனது தம்பி இருக்கிறார்.

இப்படி பன்றீங்களே இசைஞானி.. ரஜினியின் கூலிக்கு ‘செக்’ வைத்த இளையராஜா..

அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆர்வத்துடன் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார் என அருள்நிதியை பாண்டிராஜுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். மேலும் தான் ஒரு ஜாலியான கதையில் நடிக்க வேண்டும் எனவும் தனது விருப்பத்தினைத் தெரிவித்திருக்கிறார்.

இதன்படி பாண்டிராஜ் அருள்நிதியைச் சந்தித்து கதை சொல்ல, அவரும் ஒப்புக் கொண்டு நடித்தார். அவ்வாறு உருவான படம் தான் வம்சம். அருள்நிதிக்கு இந்தப் படம் சிறந்த வரவேற்பினைக் கொடுத்தது. படமும் ஹிட் ஆனது. இவ்வாறு தனக்கு வந்த கதையை தனது தம்பிக்காக விட்டுக் கொடுத்து அவரையும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக்கி அழகு பார்த்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதன்பின் உதயநிதியும் மளமளவென பல படங்களில் நடித்து தன் நடிப்புத் திறமையை கண்ணே கலைமானே, சைக்கோ, மாமன்னன், கலகத் தலைவன் போன்ற படங்களின் மூலம் மெருகேற்றிக் கொண்டார்.

அருள்நிதியும் தொடர்ந்து ஆக்சன், த்ரில் படங்களில் நடித்து தனி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...