கமலுடன் நடிப்பில் வெளுத்து வாங்கிய கோவை சரளா.. சதிலீலாவதியில் முதலில் நடிக்க இருந்த ஜோடி யார் தெரியுமா?

இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷல் தயாரிப்பில் 1995-ல் வெளிவந்த திரைப்படம் தான் சதிலீலாவதி. ரமேஷ் அர்விந்த், ஹீரோ, குண்டு கல்பனா ஆகியோருடன் கமல்ஹாசனும், கோவை சரளாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நாடகத் தன்மை கொண்ட இந்தப் படத்தினை காட்சிக்குக் காட்சி பாலுமகேந்திரா செதுக்கியிருப்பார். கமல்ஹாசனின் கிண்டல், கேலி, நையாண்டி என படம் முழுவதும் மெல்லிய ஒரு நகைச்சுவே இழையோடியே இருக்கும். அதற்குப் பெரிதும் துணை புரிந்தது கிரேஸி மோகனின் வசனங்கள்.

கமல், கிரேஸி மோகன் கூட்டணியில் வந்த படங்கள் அனைத்துமே தனி காமடி ஜானரில் பயணிப்பவை. ஒருமுறைக்கு இருமுறை பார்த்தால் மட்டுமே நகைச்சுவையோடு சொல்லியுள்ள அரசியலும், சமூக அர்த்தங்களும் புலப்படும். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக கோவை சரளா நடித்திருப்பார்.

பாட்டுப் போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் கண்டுபிடித்த முத்து.. தேன் குரலில் திகட்டாத பாடல்களை பாடி ஹரிணி

பெயருக்கு ஏற்ற படியே கோவை வட்டார வழக்கில் பேசி நடிப்பில் கலக்கியிருப்பார் கோவை சரளா. அதிலும் மாருகோ.. மாருகோ.. பாடலில் கமலுடன் ஜோடி சேர்ந்து ஆடும் போது பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக விளங்கிய சதிலீலாவதியில் முதலில் கமல்-கோவை சரளா ஜோடிக்குப் பதிலாக நடிக்க இருந்தது நாசர் தான்.

முதலில் கமல் கதாபாத்திரத்திற்கு நாசர் கமிட் ஆனார். அதன்பிறகு அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஊர்வசி யோசித்திருக்கின்றனர். ஆனால் அவரை நடிக்க வைத்தால் ஹீரோயின் சாயல் தெரியும் என்பதால் அதன்பின் பாலுமகேந்திரா மனதில் கோவை சரளா நடிக்க வைக்கலாம் என்ற எண்ணம் உருவானது.

அதன்பின் கோவை சரளா நடிக்க ஒப்பந்தமானார். அதன்பிறகு சில காரணங்களால் நாசர் நடிக்க முடியாமல் போக, கமல் சக்திவேல் கவுண்டராக இந்த பாத்திரத்தில் நடிக்க, பழனிவேல் கவுண்டராக கோவை சரளா படம் முழுக்க புகுந்து விளையாடியிருப்பார்.

இன்றும் தொலைக்காட்சிகளில் இந்தப் படத்தைப் பார்க்கும் போது கோவை சரளாவுக்குள் எப்படி ஓர் திறமையான நடிகை இருந்திருக்கிறார் என்பதை பாலுமகேந்திரா வெளிப்படுத்தியிருப்பார். இந்தப் படம் மீண்டும் இந்தி மற்றும் கன்னடத்திலும் எடுக்கப்பட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...