இன்று பிறந்தநாள் கொண்டாடும் அஜித்குமாருக்கு பரிசாக ஷாலினி என்ன கொடுத்தார் தெரியுமா…?

மே 1 என்றால் நமக்கு நினைவிற்கு வருவது உழைப்பாளிகள் தினம் போல மற்றொன்று நடிகர் அஜித்குமார் அவர்களின் பிறந்தநாள் ஆகும். தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள முன்னணி நடிகர் ஆவார். ‘தல’, ‘அல்டிமேட் ஸ்டார்’, ‘காதல் மன்னன்’ ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

நடிகர் மட்டுமல்லாமல் அஜித்குமார் ஒரு ரேசரும் ஆவார். 1982 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘பிரேம புஸ்தகம்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ‘அமராவதி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘சிட்டிசன்’, ‘தீனா’, ‘அட்டகாசம்’, ‘ரெட்’, ‘பூவெல்லம் உன் வாசம்’, ‘வில்லன்’, ‘வரலாறு’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘பில்லா 2’ , ‘வீரம்’, போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் அஜித்குமார்.

இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை ஆரம்பித்து ‘காதலுக்கு மரியாதை’, ‘அமர்க்களம்’, ‘அலைபாயுதே’, ‘பிரியாத வரம் வேண்டும்’ போன்ற திரைப்படங்களில் நடித்த ஷாலினியை அஜித்குமார் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகனும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இன்று நடிகர் அஜித்குமார் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாள் பரிசாக அவரது மனைவி ஷாலினி டுகாட்டி பைக்கை பரிசளித்துள்ளார். X தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஷாலினி அஜித்குமார் இதை பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...