கையில் சிகரெட்டுடன் கண்ணதாசன்.. டென்ஷனில் இருந்த இளையராஜா.. கூல் ஆக்கிய சூப்பர் ஹிட் பாடல்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் வெளிவந்த ஒவ்வொரு படங்களுமே பல கிளாசிக் ஹிட் பாடல்களைக் கொடுத்தது. 16 வயதினிலே படத்தில் தொடங்கிய இவர்களது பயணம் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டது. இவ்வாறு இவர்கள் காம்போவில் 1979-ல் வெளிவந்த படம் தான் நிறம் மாறாத பூக்கள்.
கிழக்கே போகும் ரயில் படத்திற்குப் பின்னர் சுதாகர், ராதிகா நடிப்பில் வெளிவந்த படம். மேலும் இப்படத்தில் விஜயன், ரதி போன்றோரும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே அப்போது இலங்கை வானொலியை ஆக்கிரமித்தன. குறிப்பாக ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. ஜென்சி, மலேசியா வாசுதேவன் குரலில் இந்தப் பாடல் கேட்போரை காதலால் உருக வைக்கும் ரகத்தைச் சார்ந்தது. இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இந்தப் பாடல் உருவானது எப்படி தெரியுமா?

வடிவேலுவை ஒதுக்கிய கோவை சரளா, கவுண்டமணி.. இருந்தும் காமெடி ஜாம்பவானாக மாறியது இப்படித்தான்.. சீக்ரெட் சொன்ன இயக்குனர்!
இசைஞானி இளையராஜா நிறம் மாறாத பூக்கள் படத்திற்கான பாடல்களுக்கான டியூன் அனைத்தையும் போட்டு விட்டு ரீ-ரிக்கார்ட்டிங்கில் பிஸியாக இருந்தார். இந்நிலையில் ஒரு பாடலை எழுத வேண்டிய கண்ணதாசனுக்காக காத்திருந்தார். ஆனால் கண்ணதாசனோ வர கால தாமதம் ஆக்கினார். காலை 7 மணிக்கு வர வேண்டியவர் 10 மணிக்குத்தான் வந்திருக்கிறார்.
அதுவும் எப்படி தெரியுமா? கையில் சிகரெட்டுடன்..

அப்போது இளையராஜாவிடம் பாட்டுக்கு மெட்டா, இல்லை மெட்டுக்குப் பாட்டா என்று கேட்டிருக்கிறார். இளையராஜா தான் போட்டு வைத்திருந்த டியூனை தானனா..தானனனா.. என்று பாட உடனே கவிஞர் கண்ணதாசன் எழுதிக்கோங்க

ஆயிரம் மலர்களே.. மலருங்கள்.. அடுத்த டியூனை இளையராஜா சொல்ல
அமுத கீதம் பாடுங்கள்.. பாடுங்கள்..
காதல் தேவன் காவியம் நீங்களோ.. நாங்களோ..
நெருங்கி வந்து சொல்லுங்கள்.. சொல்லுங்கள்..

என்று உடனே மளமளவென வரிகளைச் சொல்ல வாயடைத்துப் போய்விட்டார் இளையராஜா. நான் இசையில் வேகம் என்றால் இவர் கவியில் வேகம் என கண்ணதாசனின் புலமையை எண்ணி மெய்சிலிர்த்திருக்கிறார் இளையராஜா. இந்தப் பாடலின் ஹிட் பற்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...