வடிவேலுவை ஒதுக்கிய கோவை சரளா, கவுண்டமணி.. இருந்தும் காமெடி ஜாம்பவானாக மாறியது இப்படித்தான்.. சீக்ரெட் சொன்ன இயக்குனர்!

ஒரு காலத்தில் இவரின் படங்களுக்காக தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. குடும்பப்படங்கள் என்றாலே இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் இவர் படங்கள் பிரபலமாக இருந்தது. இன்னமும் டிவியில் இவர் படங்களைப் போட்டால் குடும்பத்துடன் உட்கார்ந்து வாய்விட்டு சிரித்து ரசித்து பார்க்கலாம். அவர் யார் தெரியுமா? இயக்குனர் வி சேகர் தான். திருவண்ணாமலையை சொந்த ஊராகக் கொண்ட இவர் பாக்கியராஜின் உதவியாளராக அவருடன் சில படங்கள் பணியாற்றி பின்னர் ‘நீங்களும் ஹீரோதான்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

இவரது படங்களின் ஸ்பெஷல் என்னவென்றால் கருத்துடன் கூடிய காமெடி தான். வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாரி போச்சு போன்ற பல எவெர்கிரீன் படங்களைக் கொடுத்தவர். குறிப்பாக திரையில் வடிவேலு கோவை சரளா காமெடி கூட்டணியை உருவாக்கியவர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, கோவை சரளா காம்பினேஷனில் காமெடியில் கலக்கியவர். அனால் இந்த கூட்டணியை சாதாரணமாக அவர் உருவாக்கவில்லை.

சசிகுமார் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா.. ஓஹோவென ஹிட் ஆகிய படத்தை மிஸ் பண்ணிய லேடி சூப்பர் ஸ்டார்
வி சேகர் இயற்றிய வரவு எட்டணா செலவு பத்தணா படத்தில் கோவை சரளாவை வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க நடிக்க வைத்தார். ஆனால் முதலில் கோவை சரளா மறுத்தாராம். ஏனெனில் வடிவேலு அப்போதுதான் ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தார். மேலும் கருப்பாக இருக்கிறார் எனவும் அவருடன் நடித்தால் தனது சினிமா மார்க்கெட் குறைந்து விடும் எனவும் கோவை சரளா கூறியிருக்கிறார். இது மட்டுமின்றி அப்போது அவர் கமலுடன் ஜோடியாக சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார்.
எனவே இந்த நேரத்தில் வடிவேலுவுடன் நடித்தால் தனது சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என எண்ண, இயக்குனர் சேகர் கோவை சரளாவை சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தார். படம் வெளி வந்தது.

படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் ரசிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக வடிவேலு கோவை சரளா காம்போ திரையில் வயிற்றை பதம் பார்த்தது. இந்த ஜோடியை மக்கள் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து காலம் மாறிப்போச்சு படம் வெளிவர இந்த கூட்டணி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

எந்த வடிவேலுவை கோவை சரளா வேண்டாம் என்றாரோ அதே வடிவேலுவுடன் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர்கள் காம்போவில் வந்த அனைத்து காமெடியும் ஹிட் ஆனது. வி சேகர் படங்களில் சம்பளமே வேண்டாம் என்று சொன்ன வடிவேலு அவரது திறமையால் கோடிகளைத் தொட ஆரம்பித்தார். இவரது அளவிற்கு திரையில் தர லோக்கல் காமெடியில் இன்றுவரை யாருமே சாதிக்கவில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews