ஆபிஸ் பையனுக்கு புரியாததால் மொத்த பாட்டையும் மாற்றிய கண்ணதாசன்.. உருவான சூப்பர் ஹிட் பாடல்!

இப்போதெல்லாம் வருகிற பாடல்கள் படம் வெளியாகி திரையில் ஓடி மறைவதற்குள் பாடல்கள் மறைந்து விடுகின்றன. காரணம் பாடலை விட ஆதிக்கம் செலுத்தும் இசை, புரியாத வரிகள், ஆங்கிலச் சொற்கள் கலப்பு போன்றவையாகும். ஆனால் அந்தக் காலகட்டங்களில் வந்த பாடல்கள் பெரும்பாலானவை இன்று வரை மனதை விட்டு அகலாமல் இருக்கின்றன. ஒவ்வொரு வரிகளையும் பார்த்துப் பார்த்து செதுக்குவார்கள்.

அவ்வாறு கவியரசர் கண்ணதாசன் செதுக்கிய ஒரு பாடல் உருவான வரலாறு தான் இது. சிவாஜி நடிப்பில் உருவான படம் ஒன்றிற்கு பாடல் எழுத அமர்ந்தார் கண்ணதாசன். அப்போது இயக்குனர் பாட்டிற்கான சூழலை சொல்ல.. கண்ணதாசன் உடனே பேனாவை எடுத்து,

“தாமரை உயரம் தண்ணீர் அளவு

உள்ளத்தளவே உலகளவு

காவிரி ஆறு கரைபுரண்டாலும்

காக்கைக்கு தேவை மூக்களவு”

என்று மள மளவென எழுத இயக்குனருக்கும் மற்றவர்களுக்கும் பிடித்து விட்டது. தொடர்ந்து மூன்று சரணங்கள் எழுதி, ஒரு மணி நேரத்தில் பாடலை எழுதி முடித்து விட்டார்கள். அப்போது கண்ணதாசன். அப்போது ஆபீஸ் பையன் காபி கொண்டு வந்து தருகிறான். கண்ணதாசன் அவனிடம் “டேய்… பாட்டை கேட்டியா? எப்படி இருக்கு..? எனக் கேட்க, அதற்கு அவன் “ஐயா பாட்டு பாடுறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு. ஆனா எனக்கு எதுவும் புரியலை” என்றான்.

அந்தக் கால பேய்ப்படங்களின் பிதாமகன் விட்டாலாச்சார்யா.. தியேட்டரையே நடுங்க வைத்த படைப்பாளி

அதிர்ச்சியடைந்த கண்ணதாசன் “உனக்கு என்னடா புரியலை?” எனக் கேட்க, “எனக்கு ஒண்ணும் புரியலை. என்னமோ தாமரை, காக்கானு வருது, அது மட்டும் தெரியுது. ஆனா அர்த்தம் புரியலே” என்று அந்த பையன் கூறியுள்ளார்.

உடனே கண்ணதாசன், “டேய் விசு… வேற டியூன் போடு. புதுசா வேற பாட்டு எழுதுவோம்” என்றார். இப்போது விஸ்வநாதனுக்கு அதிர்ச்சி. “அண்ணே.. அவன் புரியாம பேசுறான். எல்லாருக்கும் இந்த பாட்டு பிடிச்சு இருக்கு. இதையே வச்சுக்குவோம் என்று விஸ்வநாதன் கூறியுள்ளார்.

விஸ்வநாதன், தயாரிப்பாளர், இயக்குனர், யார் சொல்லியும் கேட்காமல் கண்ணதாசன் பிடிவாதமாக இருக்கிறார். “டேய் நாம பாட்டு எழுதுறது பண்டிதனுக்கு இல்லை. இவனை மாதிரி இருக்கிற ரசிகர்களுக்குத்தான். இவனுக்கு புரியலைனா, எல்லாருக்கும் புரிவது போல் வேற ஒண்ணு எழுதுவோம்” என்றிருக்கிறார்.

கண்ணதாசன் அன்று பிடிவாதமாக இருந்து மாற்றி எழுதிய பாடல் தான்.. சிவாஜி கணேசன்- ஜெயலலிதா நடித்த “தெய்வமகன்” படத்தில் இடம்பெற்ற “கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா” என்ற பாடல்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews