தொழிலதிபருடன் திருமணம்.. அரசியலில் தோல்வி.. இந்தியன் பட நடிகை ஊர்மிளாவின் அறியாத தகவல்கள்..!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் நடித்திருந்த நிலையில் அதில் ஒருவராக நடித்தவர்தான் ஊர்மிளா. நடிகை ஊர்மிளா சிறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்தவர். 1977 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமாக கார்ம் என்ற திரைப்படத்தில் தான் அவர் அறிமுகமானார்.

இதனை அடுத்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் அதன் பிறகு அவர் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு சாணக்கியன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தின் நாயகன் கமல்ஹாசன். கமலுடன் ஊர்மிளா இணைந்து நடித்த முதல் படம் இதுதான்.

urmila 2

ஜாக்கிசான், கமல்ஹாசனுடன் நடித்த நடிகை.. சொந்தமாக உழைத்து 100 கோடிக்கும் மேல் சம்பாதித்தவர்..!

சாணக்கியன் படத்தில் கமல்ஹாசன் முதலமைச்சரை கொலை செய்ய முயற்சி செய்வார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடையவே, முதலமைச்சரின் இமேஜை உடைப்பதற்காக ஒரு மிமிக்ரி கலைஞர் உதவியால் முதலமைச்சர் பேசுவது போலவே ஒரு உரையை உருவாக்கி, அதை வானொலியில் ஒளிபரப்ப செய்வார்.

அதனால் ஏற்படும் விபரீதம், முதலமைச்சருக்கு ஏற்படும் அவமானம், போலீசால் விரட்டப்படுவது என்ற கதையில் கமல்ஹாசனுககு ஜோடியாகவும் அவருடைய இலக்கை அடைய உதவி செய்யும் கேரக்டரில் ஊர்மிளா நடித்திருப்பார். இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு இணையாக அவரது நடிப்பு இருந்ததாக ஊர்மிளாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

சாணக்கியன் படத்திற்கு பின் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படத்தில் ஊர்மிளா நடித்தார். கமலஹாசன், மனிஷா கொய்ராலா இந்த படத்தில் நாயகன், நாயகியாக நடித்திருந்தாலும் இரண்டாம் கதாநாயகியாக இந்த படத்தில் ஊர்மிளா நடித்தார். கமல்ஹாசனை அவர் ஒருதலையாக காதலிப்பது போல் காட்சிகள் இருக்கும்.

urmila 3

சிவாஜியுடன் நடித்து எம்.ஜி.ஆருடன் நடிக்க ஆசைப்பட்ட 5 நடிகைகள்!

ஆர்டிஓ அலுவலகத்தில் கமல்ஹாசனுக்கு ஊர்மிளாவின் தந்தையால் தான் வேலை கிடைக்கும் என்பதால் அவர் ஊர்மிளாவின் வீட்டிற்கு சென்று அவர் சொல்லும் வேலையெல்லாம் செய்வார். அவருடன் டான்ஸ் ஆடுவார், பாட்டு பாடுவார், மனிஷா கொய்ராலாவை சீண்டுவார். இந்த படத்தில் ஊர்மிளாவின் காட்சிகள் காமெடி மற்றும் ரொமான்ஸாக இருக்கும்.

அதன் பிறகு ஊர்மிளா பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தார். இவர் நடித்த ஹிந்தி படம் ஒன்று சூப்பர் ஹிட் ஆகியது என்றால் அது ரங்கீலா. அமீர்கான் ஊர்மிளா நடித்த இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தை ராம்கோபால் வர்மா இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து ராம்கோபால் வர்மாவின் பல படங்களில் ஊர்மிளா நடித்தார்.

இந்த நிலையில் நடிகை ஊர்மிளா நடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி காஷ்மீரை சேர்ந்த தொழிலதிபர் அக்தர் மிர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவர் திரைப்படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு வெளியான பிளாக்மெயில் என்ற ஒரே ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடித்திருந்தார். urmila 1

திருமணம் செய்து கொண்ட பின் அவரது கவனம் அரசியல் பக்கம் சென்றது. 2019 ஆம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மும்பை வடக்கு தொகுதியில் அவர் 2019 ஆம் ஆண்டு எம்பி தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார். அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சிவசேனா கட்சியில் இணைந்தார்.

அறிமுகமானது ஒரு பாடல் நடனத்தில்.. அதன்பின் நடிகையாக மாறிய தேவயானி..!

உத்தவ்தேவ் தாக்கரேவின் விருப்பத்திற்குரிய அரசியல்வாதியாக இன்றும் அவர் இருக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு மீண்டும் மும்பை வடக்கு தொகுதியில் சிவசேனா கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews