சூப்பர் ஸ்டாரா இருந்துட்டு போ!.. எனக்கு கப்பம் கட்டு முதல்ல.. ‘கூலி’ படத்துக்கு செக் வைத்த இளையராஜா!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது. அந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோவில் ரஜினிகாந்த் நடித்து வெளியான தங்கமகன் படத்தில் இடம்பெற்ற “டிஸ்கோ” பாடல் இடம்பெற்றன.

இளையராஜாவிடம் அனுமதி பெறாமல் அந்தப் பாடலை ரஜினிகாந்தின் கூலி படத்துக்கு பயன்படுத்தியுள்ளதாக பகிர் குற்றச்சாட்டை தற்போது இளையராஜா தரப்பு வெளியிட்டது மட்டுமின்றி சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.

கூலி படத்துக்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நல்ல நண்பராக இருந்த இளையராஜா கடந்த பல ஆண்டுகளாக அவருடன் இணைந்து எந்த ஒரு படத்திலும் பணியாற்றவில்லை. இந்நிலையில், ரஜினிகாந்தின் படத்துக்கு இளையராஜா எந்த ஒரு ஆட்சேபணையும் தெரிவிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனக்கு பணம் கொடுக்காமல் தன்னுடைய பாடலை எப்படி பயன்படுத்தலாம் என்கிற கேள்வியை எழுப்பியது மட்டுமின்றி வக்கீல் நோட்டீசும் இளையராஜா அனுப்பியுள்ளார்.

பல கோடி ரூபாய் சொத்துக்கள் உடைய இளையராஜாவுக்கு இன்னும் பணத்தின் மீதான ஆசை குறையவில்லை போல சாதாரணமாக டைட்டில் டீசருக்கு பயன்படுத்திய வீடியோவுக்கு பணம் கேட்கிறார் என ரஜினி ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

அதே நேரம் பெரிய நிறுவனமான சன் பிக்சர்ஸ் உரிய அனுமதியை பெற்று இளையராஜாவுக்கு தரவேண்டிய பணத்தை செலுத்தி அந்தப் பாடலை அனிருத் பயன்படுத்தி இருக்கலாம். வர்த்தக ரீதியான படம் என்பதால் இளையராஜா அனுப்பியுள்ள நோட்டீஸ் சரிதான் என இளையராஜா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜா மற்றும் வைரமுத்து இடையே சர்ச்சை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் மட்டுமே சொந்தக்காரரா? அல்லது அந்த பாடலை எழுதியவர் மற்றும் பாடியவர்கள் சொந்தக்காரர்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஒரு படத்துக்கு பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கி விட்டுத்தானே இசையமைக்கிறார். அப்படி இருக்க பணம் கொடுத்த தயாரிப்பாளருக்கு தான் அந்தப் பாடல் சொந்தமாகும் என்றும் கூறுகின்றனர்.

வைரமுத்துவின் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக அவர் ஒரு நல்ல மனிதனே கிடையாது எங்களால் வளர்ந்தவர் தான் வளர்த்து விட்ட ஏணியை எட்டி உதைக்கும் கேவலமான புத்தி கொண்டவர். இன்னொரு வார்த்தை என் அண்ணன் இளையராஜாவை இழுத்து பேசினால் நடப்பதை வேறு என வைரமுத்துவை கடுமையாக கங்கை அமரன் எச்சரித்துள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் என்றும் பாராமல் அவருடைய படத்துக்கு அவருடைய படத்தில் இடம் பெற்ற பாடலை பயன்படுத்துவதற்கு கூட இளையராஜாவிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் என நோட்டீஸ் விடுவது சரியான அணுகுமுறை இல்லை என கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...