இவருதான்யா எளந்தாரி புள்ள.. கடித்த பாம்பை கையில் இறுகப் பிடித்து தோளில் போட்டு வந்த நபர்..

பீகார் : நம் ஊரில் சொலவடை ஒன்று சொல்வார்கள்.. ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு என்று.. பதின் பருவத்தில் எதையும் சிந்திக்காமல் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பது இதற்கு அர்த்தம். ஆனால் இங்கு ஒருவர்…

Bihar snake man

பீகார் : நம் ஊரில் சொலவடை ஒன்று சொல்வார்கள்.. ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு என்று.. பதின் பருவத்தில் எதையும் சிந்திக்காமல் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பது இதற்கு அர்த்தம். ஆனால் இங்கு ஒருவர் தன்னைக் கடித்த பாம்பை விடாது பிடித்து பாம்புக்கே பயம் காட்டி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். இதனால் அங்கு வந்த நோயாளிகள் இவரைக் கண்டதும் அலறி ஓடினர்.

பீகார் மாநிலம் பாகல்பூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை பாம்பு கடித்துள்ளது. பொதுவாக மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு உடனடியாக மருத்தும் பார்க்கப்படும். ஆனால் கடித்த பாம்பு எதுவெனத் தெரிந்தால் அதற்கேற்றவாறு சிகிச்சை அளிப்பது இன்னும் சுலபம். அதனால் மருத்துவர்கள் என்ன பாம்பு கடித்தது என்று கேட்பார்கள். இந்நிலையில் அந்நபரைக் கடித்த பாம்பு கொடிய விஷத் தன்மை கொண்ட கண்ணாடி விரியன் வகையைச் சார்ந்தாக இருந்திருக்கிறது.

இப்படியெல்லாம யோசிப்பாங்க..? புதிதாக வாங்கிய XL-க்கு வித்தியாசமான முறையில் பார்ட்டி..

தன்னைக் கடித்த பாம்பினை லாவகமாகப் படித்து அதன் கழுத்துப் பகுதியை இறுகப் பற்றிக் கொண்டு கழுத்தில் பாம்பைச் சுற்றி தள்ளாடியபடியே மருத்துவமனைக்கு வந்திருக்கிறார் பிரகாஷ். மருத்துவமனையில் இவர் கையில் பாம்புடன் வந்ததைக் கண்டதும் அங்குள்ள நோயாளிகள், ஊழியர்கள் பதறினர். எனினும் அந்நபர் எந்த பயமும் இல்லாமல் ஒரு நிலைக்கு மேல் முடியாமல் பாம்பைக் கையில் பிடித்தவாறே நடைபாதையில் படுத்திருக்கிறார். இக்காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவர்தான்யா உண்மையான எளந்தாரிபுள்ள என்றும், முதல்ல அந்தப் பாம்புக்கு வைத்தியம் பாருங்க என்றும், இவரு பாம்பு கிட்ட மாட்டல.. பாம்புதான் இவருகிட்ட மாட்டிக்கிருச்சு என்றும் நெட்டிசன்கள் கமெண்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.