பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற குப்பை சேகரிக்கும் தொழிலாளி மகன்.. வறுமையிலும் தந்தை கொடுத்த காஸ்ட்லி பரிசு.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..

பெற்ற பிள்ளைகள் நன்றாகப் படித்தால் தந்தை ஏதாவது பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து அவர்களை ஊக்குவிப்பது வழக்கம். பெரும்பாலும் பரிசுப் பொருட்கள் சைக்கிள், வாட்ச், புத்தகங்கள் அவர்களுக்கான கல்வி உபகரணங்களாகத் தான் இருக்கும். ஆனால்…

I Phone 16 Gift

பெற்ற பிள்ளைகள் நன்றாகப் படித்தால் தந்தை ஏதாவது பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து அவர்களை ஊக்குவிப்பது வழக்கம். பெரும்பாலும் பரிசுப் பொருட்கள் சைக்கிள், வாட்ச், புத்தகங்கள் அவர்களுக்கான கல்வி உபகரணங்களாகத் தான் இருக்கும். ஆனால் இங்கு ஒரு தந்தை தனது மகனுக்காக கொடுத்த காஸ்ட்லியான கிப்ட் தான் இணையத்தையே கலக்கி வருகிறது.

கல்வியின் சிறப்பையும், தந்தையின் பாசத்தையும் ஒருசேர உணர்த்துவதாக இந்த வீடியோ உள்ளது. அதில் குப்பை சேகரித்து அதை விற்று குடும்பத்தை நடத்தும் ஒரு கூலித் தொழிலாளி தனது கையில் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16 ரக செல்போனை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்.

குப்பை சேகரிக்கும் தொழிலாளியிடம் ஐபோன் எப்படி என அருகிலிருந்தவர்கள் கேட்கையில் தனது மகனுக்காக இந்த ஐபோனை வாங்கியிருப்பதாகவும், பொதுத் தேர்வில் அவன் வெற்றி பெற்றதற்காக அவனுக்காக பரிசளிக்க உள்ளதாக அந்தத் தந்தை வெகுளியாகக் கூறியிருக்கிறார்.

இந்தியா ஜெயிச்சாலும்… ரோஹித் இப்படி ஒரு சரிவை சந்திச்சுட்டாரே.. ஐந்து வருடங்களில் முதல் முறையாக நடந்த சோகம்..

ஏற்கனவே அவரிடம் ரூ.85,000 மதிப்பிலான ஐபோன் இருக்கும் நிலையில் தற்போது மகனுக்காக ரூ. 1.5 லட்சம் விலையுள்ள ஐபோன் 16 லேட்டஸ்ட் செல்போனை வாங்கியுள்ளதாக பெருமையுடன் கூறினார். இதனைப் பார்த்த பல நெட்டிசன்கள் சிலர் பொறாமையுடனும், மற்றும் சிலர் தந்தையின் அன்பையும், கல்வியின் சிறப்பையும் பதிவிட்டு வருகின்றனர்.

எனினும் குப்பை சேகரித்து வாழ்க்கை நடத்தும் இத்தொழிலாளியிடம் இரண்டு காஸ்ட்லியான போன் வாங்கும் அளவிற்கு பணம் எப்படிச் சேர்ந்தது என்பது குறித்து விபரங்கள் ஏதும் இல்லை.