விமானங்களைப் போல் அரசுப் பேருந்துகளிலும் இனி ஏர்ஹோஸ்டஸ் போன்று பணிப்பெண்கள்.. எந்த ஊருல தெரியுமா?

மும்பை : பொதுவாக விமானங்களில் தான் பயணிகளுக்கு உதவுவதற்காக ஏர்ஹோஸ்டஸ் எனப்படும் பணிப்பெண்கள் பணியமர்த்தப்படுவர். அவர்களின் வேலையே பயணிகளுக்கு உதவுவது, சரியான இருக்கையில் அமர வைப்பது, ஆபத்துக்காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்குவது,…

Air Hostess

மும்பை : பொதுவாக விமானங்களில் தான் பயணிகளுக்கு உதவுவதற்காக ஏர்ஹோஸ்டஸ் எனப்படும் பணிப்பெண்கள் பணியமர்த்தப்படுவர். அவர்களின் வேலையே பயணிகளுக்கு உதவுவது, சரியான இருக்கையில் அமர வைப்பது, ஆபத்துக்காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்குவது, சீட்பெல்ட்டின் அவசியத்தை உணர்த்துவது, ஒவ்வொரு பயணிக்கும் தனித் தனியே அக்கறை எடுத்து அவர்களை உபசரிப்பது போன்றவற்றைக் கொண்டிருப்பர். உலகம் முழுக்க விமான பணிப்பெண்கள் வானில் பறந்து கொண்டே தங்கள் வேலையைச் செய்கின்றனர்.

ஏர்ஹோஸ்டஸ் வேலைக்கு பொதுவாகவே கனிவான பேச்சும், அழகும் கூடிய பெண்களையே பணியமர்த்துவது வழக்கம். இப்படி விமானப் பயணிகளின் நண்பனாக விளங்கும் ஏர்ஹோஸ்டஸ் போன்று இனி பேருந்துகளிலும் இதுபோன்ற பெண்களை பணியமர்த்த உள்ளனர்.

மகாராஷ்ரா மாநிலத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் உள்ளது போன்று சொகுசுப் பேருந்துகளில் பயணிகளுக்கு உதவுவதற்காக இப்பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இப்பெண்களுக்கு ஷிவ்நேரி சுந்தரிகள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அஜீத்துடன் குட் பேட் அக்லி படத்தில் மோதப்போகும் வில்லன் யார் தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்

முதற்கட்டமாக மும்பையிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள புனேவிற்கு இயங்கும் பேருந்துகளில் இந்தப் பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்காக இவர்களுக்குக் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

பெரும்பாலான பெண்களின் கனவு வேலையாக இருப்பது ஏர்ஹோஸ்டஸ் பணி. ஏனெனில் விமானத்தில் உலகையே சுற்றி வந்து பணியாற்றுவது என்பது யாருக்குத்தான்பிடிக்காது. அவ்வாறு இந்தப்பணி கிடைக்காத பெண்கள் இனி ஷிவ்நேரி சுந்தரிகள் மூலமாக தங்களின் ஏர்ஹோஸ்டஸ் கனவினை நனவாக்கிக் கொள்ளலாம்.