லட்டுல உங்களுக்கு ஜோக் கேட்குதா…? கொதித்த பவன் கல்யாண்.. மன்னிப்பு கேட்ட கார்த்தி

திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தினால் இந்து மதத்தினரிடம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதி லட்டு தயாரிப்பில்…

Tirupathi Laddu

திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தினால் இந்து மதத்தினரிடம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் சப்ளை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். மேலும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இவ்விவகாரத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கார்த்தி-அர்விந்த்சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் செப்டம்பர் 27-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்திற்கான புரோமோஷன் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. மெய்யழகன் திரைப்படம் தெலுங்கில் சத்தியம் சுந்தரம் என்ற பெயரில் வெளியாகிறது. இதனை 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் லட்டு குறித்த மீம் ஒன்றைக் காட்டி தொகுப்பாளினி கேட்க, அதற்கு கார்த்தி சிரித்துக் கொண்டே லட்டு என்பது மிக சென்சிடிவான விஷயம். அதுகுறித்த இப்போது பேசக் கூடாது. மேலும் அதைப்பற்றி குறைவாகப் பேசுவதே நல்லது என பதிலளித்தார். இந்த வீடியோவானது தெலுங்கு ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

மதில்சுவர் விவகாரம்.. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னை.. நடிகை திரிஷா வழக்கில் திருப்பம்

இதனையடுத்து ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன்கல்யாண் இதுகுறித்துப் பேசுகையில், லட்டு பற்றி நகைச்சுவையா பேசுறாங்க.. ஒரு ஹீரோ பட விழாவுல லட்டு சென்சிடிவான விஷயம்ன்னு சொல்றாரு. மறுபடியும் இனிமே அப்படிச் சொல்லாதீங்க..ஒரு நடிகரா உங்களை மதிக்கிறேன். இனிமே ஏதாவது பேசுறதுக்கு முன்னால 100 தடவை யோசிச்சு பேசுங்க.. சனாதன தர்மத்தைக் காப்பாத்துங்க..” என்று கோபத்துடன் கூறியிருந்தார்.

பவன் கல்யாணின் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத கார்த்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். நான் தெரியாமல் பேசிய விஷயங்களுக்காக உங்கள் மீதுள்ள வைத்துள்ள மதிப்பால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் வெங்கடேஸ்வராவின் பக்தனாக நம் கலாச்சாரத்தினை எப்போதும் மதிப்பவன் நான்” என்றும் பதிவிட்டிருக்கிறார். இருவரும் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.