24 வருஷமா என்ஜின் ஆயில்தான் உணவு.. வடிவேலு காமெடி பாணியில் கர்நாடகாவை அதிர வைக்கும் நபர்

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஏய் படத்தில் ஒரு காமெடி வரும். அதில் வடிவேலு டியூப் லைட் விற்பவராக வருவார். அப்போது ஒருவரிடம் பேசும் போது காலையில் 2 டியூப்லைட் தொட்டுகிற சீரியல் பல்பு…

Engine Oil

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஏய் படத்தில் ஒரு காமெடி வரும். அதில் வடிவேலு டியூப் லைட் விற்பவராக வருவார். அப்போது ஒருவரிடம் பேசும் போது காலையில் 2 டியூப்லைட் தொட்டுகிற சீரியல் பல்பு என்று கூறியவாறே ஒரு பல்பினை எடுத்து கடித்து தின்பார். இந்தக் காமெடி வெகு பிரபலம் ஆனது. பழக்கத்தில் செங்கல் மண் தின்பார்கள் யாராவது இந்த மாதிரி சாப்பிடுவார்களா என்று அதை காமெடியாக எடுத்துக் கொள்வோம்.

ஆனால் நிஜத்தில் ஒருவர் வடிவேலு காமெடி போன்று பைக் இன்ஜின் ஆயிலை உட்கொண்டு வாழ்ந்து வருகிறார். கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் குமார். வயது 40. தீவிர ஐயப்ப பக்தர். ஒருமுறை பசியெடுக்கவே அருகில் இருந்த பயன்படுத்தப்பட்ட என்ஜின் ஆயிலை எடுத்துக் குடித்திருக்கிறார். அதன் சுவை இவருக்குப் பிடித்துப் போகவே அதனைத் தொடர்ந்து குடிக்க ஆரம்பித்தார். நாளடைவில் இதுவே பழக்கமாகிப் போனதில் அதற்கு அடிமையாகிப் போனார்.

ஒரே பாட்டில் எட்டு திருக்குறளை அழகாகச் சொல்லிய கண்ணதாசன்.. ஒவ்வொன்றும் முத்து மாதிரி அமைந்த தத்துவப் பாடல்

இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட இன்ஜின் ஆயிலை கடந்த 24 வருடங்களாகக் குடித்து வருகிறார். அதுவும் தினசரி சுமார் 5லிட்டர் வரை குடிக்கிறாராம். இவ்வாறு குடிப்பதால் இவருக்கு உடல் உபாதைகள் எதும் செய்யவில்லை. ஆரோக்கியமாகவே இருக்கிறார். மேலும் என்ஜின் ஆயிலுடன், காகிதம், டீ, காபி ஆகியவற்றையும் உண்கிறார்.

இவ்வாறு உடலுக்கு தேவையற்றதை உண்பது ஆபத்தானது என்றாலும் பழக்கத்தின் காரணமாக இதைச் செய்து வருகிறார் குமார்.  சிலர் மதுவுக்கு அடிமையாகி தினசரி அதைக் குடிக்கும் வழக்கம் கொண்டது போல் இன்ஜின் ஆயிலையும் சர்வசாதாரணமாகக் குடித்து உயிர் வாழ்ந்து வருகிறார் இந்த அதிசய பிறவி.