உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? அப்படின்னா மறக்காம இதைக் குடிங்க….!!!

நாம் தினமும் இருமுறை மலம் வெளியேற்றுகிறோம். அப்படி இருந்தும் நம் குடல் முழுமையாக சுத்தம் ஆவதில்லை. காரணம் நாம் 70 சதவீதம் அளவிற்கு தான் மலத்தை வெளியேற்ற முடியும். முழுமையாக வெளியேறுவது என்பது சற்று சிரமமான விஷயம் தான். குடல் சுத்தம் இல்லாவிட்டால் நம்ம உடல் அடிக்கடி வலிக்கும். நம்ம உடலில் நிறைய கழிவுகள் சேர்ந்த மாதிரி நமக்கு அடிக்கடி தோன்றும்.

வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும். மலச்சிக்கல் வந்து கொண்டே இருக்கும். வயிறு ஊதிக்கிட்டே இருப்பது போன்ற அறிகுறிகள் தோன்றும். உதாரணத்திற்கு சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் டாக்டரிடம் சென்று காண்பித்து மாத்திரை போடும் வரை சளித்தொல்லை இருக்கும். அதன்பிறகு இருக்காது. பின்னர் மீண்டும் வந்துவிடும். இதற்கும் குடல் சுத்தம் இல்லாததுதான் காரணம்.

நாள்பட்ட தோல்நோய்கள் குணமாகாமலே இருக்கும். இதற்கு நிறைய மருத்துவங்கள் பார்த்தும் குணமாகாது. இதற்கும் குடல் சுத்தமில்லாமல் இருப்பது தான் காரணம். தோல் சுத்தமில்லாமை, ரத்தம் சுத்தமில்லாமை, குடல் சுத்தமில்லாமையால் நம் உடலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறது.

walking
walking

தினமும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்த போதும் உடல் எடை குறைவதில்லை. எத்தகைய ட்ரீட்மெண்ட் எடுத்த போதும் உடல் எடை குறையவில்லை, கொழுப்பு குறையவில்லை, வயிறு, இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பு குறையவில்லை என்றால் குடலில் கண்டிப்பாக கழிவுகள் அதிகமாகத் தங்கி உள்ளது என்று அர்த்தம்.

நிறைய மன அழுத்தம், கோபம், அதிகமாக கத்தும் சுபாவம் உள்ளவர்களுக்கு அவர்களது குடல் சுத்தமில்லை என்பது தான் காரணம்.

உணவில் உள்ள கழிவுகளை முழுமையாக சுத்தம் பண்ணக்கூடிய உறுப்புகளை சுத்தம் செய்வது தான். முதலில் நமது குடல், சிறுநீரகம், மண்ணீரல் ஆகியவற்றை சுத்தம் செய்வது அவசியம். இந்த மூன்றும் நல்லா வேலை செய்தாலே குடலில் உள்ள கழிவுகள் முழுவதும் எளிதில் வெளியேறிவிடும்.

முதலில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது இதற்கு அவசியம். தினமும் தண்ணீர் இப்படி குடித்து வந்தாலே குடல் முழுமையாக சுத்தமாகி விடும். காலைல எழுந்ததும் 1டம்ளர், காலை உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாக 1 டம்ளர், சாப்பிட்டு முடித்ததும் ஒரு மணி நேரம் கழித்து 1 டம்ளர் என தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதே மாதிரி மதியமும், இரவும் தண்ணீர் குடிக்க வேண்டும். இதே போல் பெண்கள் இரண்டே முக்கால் லிட்டர் தண்ணீரும், ஆண்கள் மூன்றே முக்கால் லிட்டர் தண்ணீரும் குடிக்க வேண்டும். இப்படி செய்தால் உங்கள் குடல் கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.

குடல் நல்லபடியாக சுத்தம் ஆகிவிடும். ஒரு நாளைக்கு குடல் சுத்தமாக இல்லை என்று நினைப்பவர்கள் 2 லிட்டராவது மோர் குடிக்க வேண்டும். இது நல்ல பாக்டீரியாவை உற்பத்தி செய்து குடலில் உள்ள கழிவுகளை நல்லா கழுவி வெளியேற்றிவிடும்.

மூலிகை டீ குடிக்கலாம். காலையில் தினமும் இஞ்சி டீயும், மதியம் சுக்கு டீயும் சாப்பிட வேண்டும். அதே போல் இரவு தூங்குவதற்கு முன்பு கடுக்காயை வெந்நீரில் போட்டு குடிக்க வேண்டும். நம்ம மூட்டு இணைப்புகள் நல்ல ப்ரீயா வேலை செய்யும்.

Fibre vegitables
Fibre vegitables

நிறைய நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். வெண்டைக்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், வெள்ளை பூசணிக்காய், சுரைக்காய், கத்திரிக்காய், முருங்கக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை தவறாமல் நம் உணவில் சேர்த்து வர வேண்டும்.

ஏதாவது ஒரு காய்கறிகளை நாம் 200 முதல் 250 கிராம் வரை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். அரை வேக்காடாக அந்தக்காய் இருந்தால் பெப்பர் அண்ட் சால்ட் போட்டு சாப்பிட்டாலே போதும். நார்ச்சத்துள்ள பழங்கள் பப்பாளி, கொய்யா ஆகிய இந்த 2 பழங்களை சாப்பிட்டாலே குடல் நன்கு சுத்தமாகி விடும். அல்லது டீ டாக்ஸ் ட்ரிங்க்கை தினமும் குடிக்கலாம். இதில் புதினா, வெள்ளரிக்காய், லெமன் ஆகிய 3ம் சேர்க்க வேண்டும்.

வெள்ளரிக்காயைத் தோலை சீவி சின்ன சின்னதாகக் கட் பண்ணி நல்லா அரைச்சிடுங்க. அது கூட ஒரு கைபிடி புதினாவை போட்டு அரைச்சிடுங்க. அப்புறம் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி குடிக்கும் பருவத்திற்கு வந்ததும் அரை எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து விடுங்க. அவ்ளோதான். இதைத் தினமும் பருகி வந்தால் குடல் நன்கு சுத்தமாகி விடும்.

குடல் சுத்தமானால் தான் நாம் சாப்பிடும் சாப்பாடு முழுமையாக உடலில் சேரும். உடலில் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எந்த நோய்க்காக மருந்துகள் எடுத்தாலும் அது முழுமையாக உடலில் சென்று வேலை செய்யும்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.