மாணவர்களுக்கு யோகிபாபு கூறிய அறிவுரை…

யோகி பாபு ஆரணியில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை இராணுவத்தில் ஹவில்தாராக பணிபுரிந்தார். இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு சிறுவயதில் பயணித்தார் யோகிபாபு. பல்லிப் படிப்பை ஜம்முவில் முடித்தார் யோகிபாபு.

ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இது தவிர ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு காட்சிகளை எழுதி வந்தார். சினிமாவில் நுழைந்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எப்போதும் மனதில் கொண்டிருந்தார் யோகிபாபு.

2009 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கி நடித்த ‘யோகி’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். முதல் படத்தின் பெயரையே தனக்கு அடைமொழியாக வைத்துக் கொண்டார். 2012 ஆம் ஆண்டு சுந்தர். சி இயக்கிய ‘கலகலப்பு’ திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் யோகி பாபு.

2013 ஆம் ஆண்டு விஷாலுடன் இணைந்து ‘பட்டத்து யானை’, ஷாருக்கானுடன் இணைந்து ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்து பிரபலமானார் யோகிபாபு. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடனும், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த தனி படத்திலும் நடித்து தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார் யோகி பாபு.

தற்போது ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மாணவர்களிடம் பேசியுள்ளார் யோகி பாபு. அவர் கூறியது என்னவென்றால், ஜாதி, மதத்தை தயவுசெய்து பார்க்காதீர்கள். ஜாதி, மதம் இல்லையென்றால் நாம் எல்லாரும் நல்லா இருப்போம் மற்றும் ஒற்றுமையாக இருங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் யோகிபாபு.