ஆண்பாவம் படத்தில உதவி இயக்குனரா வேலை செய்யும் போது எனக்கு சம்பளம் இவ்வளவு தான் கொடுத்தாங்க… ரமேஷ் கண்ணா பகிர்வு…

ரமேஷ் கண்ணா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஆர். எஸ். மனோகர் அவர்களின் நாடக குழுவில் தனது 5 வயது முதல் 10 வயது வரை 1000 த்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.…

Ramesh Kanna

ரமேஷ் கண்ணா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஆர். எஸ். மனோகர் அவர்களின் நாடக குழுவில் தனது 5 வயது முதல் 10 வயது வரை 1000 த்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவரின் நடிப்பை பார்த்து அப்போதைய இந்திய குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்னண் அவர்களே ரமேஷ் கண்ணாவை பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரமேஷ் கண்ணா தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், கொடி ராமகிருஷ்ணா, விக்ரமன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் ரமேஷ் கண்ணா.

‘உன்னை நினைத்து’ திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியது மட்டுமல்லாமல் அப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் ரமேஷ் கண்ணா. அப்படத்தில் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கவே நகைச்சுவை கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்தார் ரமேஷ் கண்ணா.

‘படையப்பா’, ‘ப்ரண்ட்ஸ்’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘நீ வருவாய் என’, ‘ரோஜாவனம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘வெற்றி கொடி கட்டு’ போன்ற வெற்றித் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரமேஷ் கண்ணா.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ரமேஷ் கண்ணா தான் வாங்கிய முதல் சம்பளத்தைப் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், ஆண்பாவம் படத்தில் உதவி இயக்குனராக நான் பணியாற்றினேன். அப்படம் ஹிட்டானது. அந்த படத்தில் வேலை செய்யும் போது எனக்கு மாதம் 300 ருபாய் தான் சம்பளம் கொடுத்தார்கள் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் ரமேஷ் கண்ணா.