நான் எது வேணாம்னு நினைச்சேனோ அதுவே பிளஸ் ஆகிடுச்சு… ரம்யா கிருஷ்ணன் பகிர்வு…

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் நடித்து பிரபலமானவர். பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனங்களை கற்றுத் தேர்ந்தவர். நகைச்சுவை நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினரான சோ ராமசாமியின் மருமகள் ரம்யாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள திரைப்படத்தில் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்த ரம்யாகிருஷ்ணன், 1985 ஆம் ஆண்டு ‘வெள்ளை மனசு’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் துணை வேடங்களில் நடித்து வந்த ரம்யாகிருஷ்ணன் அவர்களுக்கு தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் வரவேற்பு கிடைத்ததால் அங்கு கவனம் செலுத்தினார்.

பின்னர் 90களின் நடுப்பகுதியில் தமிழ் சினிமாவிற்கு திரும்பிய ரம்யாகிருஷ்ணன் அம்மன் பக்தி படங்களில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அம்மன் வேடம் கச்சிதமாக ரம்யா கிருஷ்ணனுக்கு பொருந்தியது. 1999 ஆம் ஆண்டு ‘படையப்பா’ திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் ரம்யாகிருஷ்ணன்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார் ரம்யாகிருஷ்னன். இது தவிர சன் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ‘தங்கவேட்டை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்து வரும் பட்டுப் புடவை மற்றும் நகைகளை பார்க்கவே ரசிகர்கள் இருந்தனர்.

தற்போது, ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ரம்யா கிருஷ்ணன் அவர்கள் சினிமா அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட போது, படையப்பா படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிராக நெகடிவ் ரோல் நீலாம்பரியில் நடிக்கவே வேணாம் அப்படினு நெனச்சேன். ஆனால் அந்த கதாபாத்திரம் எனக்கு அதுவரை இல்லாத புகழை பெற்றுத் தந்தது. நான் வேணாம்னு நினைச்சது பிளஸ் ஆகிடுச்சு என்று பகிர்ந்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.