ரஜினியுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த் பட நடிகை! காரணம் தெரிந்தால் அதிர்ச்சி தான்!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுகன்யா. சிறந்த பரதநாட்டிய கலைஞராக இருந்த இவர் 1991 ஆம் ஆண்டு முதல் முதலாக புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

சினிமாவில் நடிக்க மறுத்த அவருக்கு முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்காக அவர் பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். அதை தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு விஜயகாந்துடன் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவரை மேலும் பிரபலமடைய செய்தது. அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.

அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் இணைந்து நடிக்க தொடங்கிய சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்துள்ளார்.

ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்ற இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குறையத் துவங்கும் போது சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் கலக்கியுள்ளார்.

இந்நிலையில் முன்னணி நடிகையாக பல மொழி படங்களில் பிரபலமடைந்த சுகன்யா, சமீபத்திய பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்காதது குறித்து மனம் திறந்துள்ளார்.

சுமார் 15 ஆண்டுகள் பிசியாக நடித்த சுகன்யாவிற்கு ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை என்று கூறினார். அதிலும் அதிர்ச்சிகரமான சுவாரசிய தகவல் ஒன்றையும் கூடுதலாக தெரிவித்துள்ளார்.

கமலின் இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்! அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா?

அவர் ஒரு படப்பிடிப்பிற்க்காக விமான நிலையம் சென்ற போது இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார் அவர்களை சந்தித்ததாக கூறினார். அவர் உடனே சுகன்யாவை பார்த்து கோவப்பட்டதாகவும் தெரிவித்தார். எதற்கு என இயக்குனரிடம் கேட்ட போது, நீங்கள் எதற்கு ரஜினியுடன் நடிக்க மறுத்தது ஏன் என் கேட்டார்.அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாக நடித்த ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் இவருக்கு கிடைத்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு தெரியாமலே போனதாகவும் கூறியுள்ளார். இப்படித்தான் ரஜினியுடன் நடிக்கும் பட வாய்ப்பை இழந்ததாக தெரிவித்துள்ளார்.