வைர மோதிரம், வைர கம்மல் என மாணவர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்கிய விஜய். அடுத்த எம். ஜி. ஆர் விஜய் தான் என பெற்றோர்கள் பெருமிதம்…

By Meena

Published:

தமிழ்நாட்டில் மிக முக்கியமான பிரபலங்களில் நடிகர் விஜய் அவர்களும் ஒருவர். இயக்குனர் S.A. சந்திரசேகர் அவர்களின் மகனாவார். தனது இளம் வயது முதலே சினிமாவில் தோன்றி இன்று சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றவர். பள்ளியில் படிக்கும் போதே சினிமாதான் தன்னுடைய எதிர்காலம் என்று மனதில் கொண்டவர் விஜய்.

1984 ஆம் ஆண்டு விஜய் தனது 10வது வயதிலேயே ‘வெற்றி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். 1992 ஆம் ஆண்டு தனது தந்தை இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நாயகனாக அறிமுகமானார்.

அடுத்ததாக விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து ‘செந்தூரப் பாண்டி’ படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கிய ‘பூவே உனக்காக’ திரைப்படம் திருமுனையாக அமைந்தது. அதன் பிறகு எண்ணிலடங்கா வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் விஜய்.

விஜய் பல சமூக கருத்துள்ள படங்களில் நடித்துள்ளார். நமது சமூகத்தின் மீதுள்ள அதீத அக்கறையினால், தன்னை கொண்டாடிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார் விஜய். இந்த கட்சியின் முதல் கட்டமாக கடந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்கினார் விஜய்.

அதே போல் இந்த வருடமும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து வைர மோதிரம், வைர கம்மல், உதவி தொகை என பரிசுகளை வாரி வழங்கியுள்ளார் விஜய். பரிசுகள் மட்டுமல்லாது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தடல்புடலான விருந்தினை வழங்கியுள்ளார். விஜய் சார் ரொம்ப எளிமையா இருந்தார், நல்லா பேசினார், எங்க வாழ்க்கையில இந்த நாளை மறக்கவே மாட்டோம், எங்கள் ஓட்டு விஜய் சார்க்கு தான் என மாணவர்கள் பேட்டி அளித்துள்ளனர். விஜய் தான் அடுத்த எம். ஜி. ஆர் என பெற்றோர்கள் பெருமிதத்துடன் கூறிச் சென்றனர்.

மேலும் உங்களுக்காக...