லியோவிற்கு முதல் ரிவ்யூ கொடுத்த உதயநிதி!.. நீண்ட நாள் சர்ப்ரைஸை உடைத்தாரா..?

பூஜை போட்ட நாள் முதலே ஒரு படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்குமேயானால் அது லியோ படம்தான். பான் இந்திய அளவில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி அதாவது நாளை படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தை பார்த்து முதல் ரிவ்யூவை தனது எக்ஸ் தளத்தில் கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

முன்னதாக லியோ படத்தின் வெளியீடு தொடர்பான பிரச்சனைகள் அனைத்திற்கும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் தான் காரணம் என்று விஜய் ரசிகர்கள் நினைத்துக் கொண்டு இருக்கையில் அப்படியெல்லாம் எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை என்பது போல இந்த ட்விட்டர் பதிவு இருக்கிறது. முன்னதாக உதயநிதி தயாரிப்பில் விஜய் குருவி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின் இருவரும் தனித்தனி பாதையில் பயணிக்க தொடங்கினர்.

இருந்த போதிலும் விஜயின் பல படங்கள் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை ரெட்ஜெயன்ட் நிறுவனத்திற்கு வழங்காமல் இருந்தார். மேலும் அவரது அரசியல் வருகை காரணமாக அவருக்கு எதிராக பல விஷயங்களை செய்து வந்தார் உதயநிதி. உதாரணமாக லியோ இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுப்பு போன்றவற்றிற்கு இவர்தான் காரணம் என விஜய் ரசிகர்கள் திட்டி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென விஜய் அண்ணனின் லியோ படம் வேற லெவலில் இருக்கிறது என்று தம்ஸ் அப் கொடுள்ளார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அருமையாக படத்தை எடுத்துள்ளார். அனிருத் இசை மற்றும் ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவு மற்றும் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவையும் டேக் செய்து பாராட்டியுள்ளார்.

அதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஹேஷ்டேக் #LCU என்று பதிவிட்டு இவ்வளவு நாள் பட குழு ரகசியமாக வைத்திருந்ததை அம்பலப்படுத்தி விட்டார் உதயநிதி. இதன் மூலம் ரசிகர்கள் லியோ படம் LCUவில் தான் வருகிறது என்று கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.