என் இளமையின் ரகசியம் இதுதான்… நதியா பகிர்வு…

ஜரீனா மொய்டு என்ற இயற்பெயரைக் கொண்ட நதியா மலையாளி பெற்றோருக்கு மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே சினிமா வாய்ப்பினை பெற்றவர். 80 களில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.

1984 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் பத்மினி அவர்களுடன் இணைந்து ‘நோக்கேத தூரத்து கண்ணும் நாட்டு’ என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அதே படம் தமிழில் ரீமேக் ஆனது. அதிலும் பத்மினியுடன் இணைந்து நடித்து தமிழில் அறிமுகமானார்.

நதியா பல வெற்றித் தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் – நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவை மற்றும் நதியாவின் கொண்டை ஸ்டைலும் கூட பிரபலமானது.

2000 த்திற்கு பிறகு துணை கதாபாத்திரங்கள், நகை கடை விளம்பரங்களில் நடித்தார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘ஜாக்பாட்’ -ஐ தொகுத்து வழங்கினார். கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமாவில் பணியாற்றும் நதியா இன்றும் இளமையாக இருப்பதை கண்டு ஆச்சர்யப்படாதோர் இல்லை.

தனது இளமையான தோற்றத்தின் ரகசியத்தை பகிர்ந்துள்ளார் நதியா. அவர் கூறியது என்னவென்றால், நான் நன்றாக சாப்பிடுவேன், பழங்கள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்வேன். மேலும் தினமும் தவறாமல் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வேன். இதுதான் எனது இளமையின் ரகசியம் என்று பகிர்ந்துள்ளார் நதியா.