அர்ஜுன் மகள் தனக்கு மருமகளாக வந்ததைப் பற்றி ஓபனாக பேசிய தம்பி ராமையா…

தம்பி ராமையா புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதில் இருந்தே எழுத்தாளராக வேண்டும் என்ற இலட்சியத்தை கொண்டவர். இவரது தந்தை கவிஞர் மற்றும் புனைகதை எழுத்தாளர் ஆவார். திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்தார் தம்பி ராமையா.

தம்பி ராமையா தமிழ் சினிமாவில் நடிகர், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றுபவர். 90 களின் ஆரம்ப காலத்தில் சன் டிவியின் தொடரில் உரையாடல் எழுத்தாளராக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் தம்பி ராமையா.

பின்னர் டி. ராஜேந்தர் மற்றும் பி. வாசு ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் தம்பி ராமையா. 1999 ஆம் ஆண்டு ‘மலபார் போலீஸ்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி நடிகராக அறிமுகமானார். 2000 ஆம் ஆண்டு முரளி மற்றும் நெப்போலியன் நடித்த ‘மனுநீதி’ படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தம்பி ராமையா.

தொடர்ந்து படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த தம்பி ராமையா 2008 ஆம் ஆண்டு வடிவேலுவை வைத்து ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் 2010 ஆம் ஆண்டு ‘மைனா’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் தம்பி ராமையா. இப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார். ‘கும்கி’, ‘சாட்டை’ போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் தம்பி ராமையா.

தம்பி ராமையா அவர்களின் மகனான உமாபதியும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராகவர். சமீபத்தில் உமாபதிக்கும் நடிகர் அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் குடும்பத்தார் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்தது. முதல் முறையாக தனது மருமகள் ஐஸ்வர்யாவை பற்றி ஓப்பனாக பேசியுள்ளர் தம்பி ராமையா. அவர் கூறியது என்னவென்றால், ஐஸ்வர்யா எனக்கு மருமகள் அல்ல மகள் தான், அதே போல் உமாபதி அர்ஜுன் வீட்டு மகன் தான். என் மருமகள் ஐஸ்வர்யா மிகவும் புத்திசாலி. மரியாதை தெரிந்த அடக்கமான பெண், என்னிடம் அப்பாவை போலவே ரொம்ப மரியாதையாக நடந்துக் கொள்வார் என்று பெருமையாக பேசியுள்ளார் தம்பி ராமையா.