ஜெயிலரை தொடர்ந்து மீண்டும் மிரட்ட வரும் ரஜினிகாந்த்!.. தீபாவளி ட்ரீட்டாக வெளியான லால் சலாம் டீசர்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், தம்பி ராமைய்யா, செந்தில் மற்றும் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் டீசர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது வெளியானது.

இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் படம் வெளியாகி மகிழ்ச்சியை அளிக்க உள்ளது.

லால் சலாம் டீசர்

தீபாவளிக்கு ரஜினிகாந்த், விஜய், அஜித் படங்கள் வரவில்லையே என கடுப்பாகி கொண்டிருந்த ரசிகர்களுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ரஜினியை டீசரில் காட்டாமலே விட்டு விடுவாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தீபாவளி பரிசை தரமாக கொடுத்து விட்டார்.

விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் போர்ஷனை குறைத்து விட்டு டீசர் முழுவதுமே நடிகர் ரஜினிகாந்தின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்புகின்றன.  அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு லால் சலாம், தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் சுந்தர். சியின் அரண்மனை 4 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. பாலாவின் வணங்கான் திரைப்படமும் பொங்கல் போட்டியில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் படத்துக்கு பிறகு

ஜெயிலர் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், லைகா நிறுவனம் லால் சலாம் படத்தில் பெரிய அளவில் ரிலீஸ் செய்தால் பிசினஸ் பண்ணி விடும் என தெரிகிறது.

கிரிக்கெட்டில் மதத்தை கலக்கக் கூடாது என்கிற கருத்துடன் உருவாகி உள்ள இந்த படத்தில் தம்பி ராமைய்யா, செந்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் 2வுக்கு பிறகு அனிருத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம் மற்றும் அயலான் என இரு படங்களுக்கும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

டீசர் முழுவதும் ரஜினிகாந்த் நிறைந்திருக்கும் நிலையில், படத்தை மொத்தமும் ரஜினி படமாகவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புரமோட் செய்து விட்டு படத்தின் இடைவேளை காட்சிக்கு மேல் தான் மொய்தீன் பாய் என்ட்ரியை வைத்து ரசிகர்களை ஏமாற்றாமல் இருந்தால் சரி.