கே.எஸ்.ரவிக்குமாரை ஆச்சர்யப் பட வைத்த சூப்பர் ஸ்டார்.. படையப்பா படப்பிடிப்பில் நடந்த புல்லரிக்க வைக்கும் சம்பவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏன் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்னமும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு தினந்தோறும் சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி பகிரப்படும் சம்பவங்களும், செய்திகளுமே காரணம். திரையில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தாலும் ஒரு மனிதன் எந்த அளவிற்கு எளிமையாக இருக்க முடியுமோ அந்த அளிவிற்கு எளிமையைக் கடைப்பிடிப்பவர். அதற்கு ஓர் உதாரணத்தினை நடிகரும், இயக்குநருமான ரமேஷ் கண்ணா பகிர்ந்திருக்கிறார்.

படையப்பா திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே அதிக வசூலை வாரிக் கொடுத்த படம். இந்தியன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து வசூலில் நம்.1 படமாகப் பெயர் பெற்றது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் துணை இயக்குநராக ரமேஷ் கண்ணா பணிபுரிந்தார். மேலும் படம் முழுக்க ரஜினியுடன் நடித்திருப்பார்.

படையப்பா படத்தின் ஷுட்டிங் பணிகள் கர்நாடக மாநிலத்தின் மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் பிஸியாக நடந்து கொண்டிருந்த தருணம். அப்போது படப்பிடிப்பு பற்றி பேசிக் கொண்டிருந்த போது ரமேஷ் கண்ணா கே.எஸ்.ரவிக்குமாரிடம் ஒரு காட்சிக்காக காலை 7 மணிக்கு ஆரம்பிச்சா முடிச்சிடலாம் என்று கூறியிருக்கிறார். இதனை கேட்டுக் கொண்டே வந்த ரஜினி என்ன டிஸ்கஷன் என்று கேட்டுள்ளார். அதன்பின் ரமேஷ் கண்ணா விபரத்தினைக் கூற ரஜினி நான் ஷீட்டிங்கிற்கு 7 மணிக்கு வந்திடுறேன். ஸ்டார்ட் பண்ணிடலாம் என்று கூறியிருக்கிறார்.

அவர் போனவுடன் கே.எஸ்.ரவிக்குமாரும், ரமேஷ்கண்ணாவும் சார் இப்படித்தான் சொல்வாரு. ஆனா வரமுடியாது. ஏன்னா மைசூர்ல இருந்து மாண்டியா 40 கி.மீ. இருக்கு. நாம வேற சீன் எடுத்திடலாம் என்று பேசியிருக்கின்றனர்.

இந்திய சினிமாவே தங்கலான் படத்துக்கு தயாராகுங்கள்..ஜி.வி.பிரகாஷ் போட்ட எக்ஸ் தள பதிவு..

சொன்னபடியே காலை 6.30 மணிக்கெல்லாம் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு மொத்த டீமும் வர 6.45 வரை காத்திருக்கின்றனர். ஆனால் ரஜினி வரவில்லை. எனவே அவர்களுக்குள் இன்னும் ரஜினி சார் வரல அவர் வந்துட்டார்னா நாங்க 6 மணிக்கெல்லாம் வந்துட்டோம்னு சொல்லுவோம் என்று பேசியிருக்கின்றனர். அப்போது ஒரு குரல் நானும் 6.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டேன் என்று.

அவர்கள் அருகில் கைக்குட்டையால் முகத்தை மூடியபடி, படுத்துக் கொண்டே ஒரு குரல் ஒலித்தது. திரும்பிப் பார்த்தால் அங்கே சூப்பர் ஸ்டார். இப்படி ஷுட்டிங் என்று வந்துவிட்டால் அவ்வளவு பொறுப்பாகவும், நேரந் தவறாமையையும் முறையாகக் கடைப்பிடிப்பாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இப்போது தெரிகிறதா எப்படி சூப்பர் ஸ்டாராக மாறினார் என்று.