யூடியூபில் கொட்டும் பணம்.. 2 குழந்தைகளுக்கு தந்தை.. சுனைனா திருமணம் செய்ய போவது இவரையா?

 

நடிகை சுனைனா துபாயை சேர்ந்த யூடியூபர் ஒருவரை திருமணம் செய்ய போவதாக கூறப்படும் நிலையில் அவர் திருமணம் செய்ய போகும் நபர் குறித்த தகவல்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமான காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நகுல் மற்றும் சுனைனா ஆகிய இருவருமே அறிமுகமானார்கள் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

அதன் பின்னர் விஜய்யின் தெறி உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை சுனைனா சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு திருமண நிச்சயதார்த்தமானதாக பதிவு செய்திருந்தார். அவருடைய கையுடன் இன்னொரு ஆண் கை இருந்ததை அடுத்து இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

sunaina husband

ஆனாலும் சுனைனாவை திருமணம் செய்யப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில் இன்று மாலை முதல் இந்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்து வருகிறது

சுனைனாவை திருமணம் செய்ய போகிறவர் காலில் அல் அமெரி என்றும் இவர் துபாயை சேர்ந்த யூடியூபர் என்றும் இவரது சேனலுக்கு மாதந்தோறும் லட்ச கணக்கில் பணம் கொட்டுவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி இந்த நபருக்கு ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தான் அவர் சுனைனாவை திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் இன்னும் சுனைனா தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை என்றாலும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விரைவில் சுனைனா இந்த தகவல்கள் வதந்தியா அல்லது உண்மையா என்பது குறித்து விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.