சூரி நடிப்பில் கருடன் 10 நாட்களில் 40 கோடி வசூல்… ஒரு காமெடியன் ஹீரோவாக நடித்து சாதனை படைத்தது இதுவே முதல்முறை…

மதுரையில் பிறந்து வளர்ந்த நடிகர் சூரி சினிமாவில் அடிமட்டத்தில் இருந்து கடின உழைப்பினாலும் விடாமுயற்சியினாலும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முன்னணி நடிகர்களுள் ஒருவராக சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார் சூரி.

சினிமாவில் பின்னணியில் வரும் கூட்டத்தில் ஒருவராக நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர். மிகச் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய சூரி அவர்களுக்கு ‘வெண்ணிலா கபடி குழு’ படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் பரோட்டா சாப்பிடும் பந்தயத்தில் நடித்தது பட்டி தொட்டியெங்கும் பரவியது.

இதனால் பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டார் சூரி. தனது சொந்த ஊரான மதுரை பேச்சுவழக்கில் இவர் செய்யும் காமெடி அனைவராலும் ரசிக்கப்பட்டது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘சுந்தரபாண்டியன்’ ஆகிய படங்களில் துணை கதாபத்திரத்தில் நடித்து பிரபலமானார் சூரி.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சூரி காமெடியனாக கலக்கி வந்தார். சூரியின் நடிப்புத் திறமையை கண்ட இயக்குனர் வெற்றிமாறன் ‘விடுதல’ படத்தை இயக்கி அதில் சூரியை நாயகனாக அறிமுகப்படுத்தினார். இரண்டு பகங்களைக் கொண்ட விடுதலை படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றிப் பெற்று இரண்டாம் பாகத்திற்காக மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது சூரி அடுத்த கட்டமாக மீண்டும் ஹீரோவாக ‘கருடன்’ திரைப்படத்தில் நடித்து வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. கருடன் படம் வெளியான 10 நாட்களில் 40 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு காமெடியன் ஹீரோவாக நடித்து அந்தப் படம் இந்த அளவிற்கு வெற்றியும் வரவேற்பும் பெறுவது இதுவே முதல்முறை. அந்த வகையில் சாதனை படைத்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார் சூரி.