புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ள சிம்ரன்… இதோ வீடியோ!!

90 ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயின்களில் ஒருவர்தான் நடிகை சிம்ரன், அவரது கட்டழகுதான் அதற்குக் காரணம். 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் படத்தின்மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு முதல் படமே மாஸ் ஹிட்.…

90 ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயின்களில் ஒருவர்தான் நடிகை சிம்ரன், அவரது கட்டழகுதான் அதற்குக் காரணம். 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் படத்தின்மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு முதல் படமே மாஸ் ஹிட்.

ஆனால் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய்  என்னும் ஹிந்திப் படம்தான், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் அம்மணி கலக்கிவிட்டார்.

துள்ளாத மனமும் துள்ளும், பிரியாமானவளே, ஜோடி, ரமணா போன்ற படங்கள் இவருக்கு மாஸ் ஹிட் படங்களாக அமைந்தன. இவர் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தபோதே, சிறு வயது நண்பரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

9005238fdafe407884232d90031abd16

தற்போது மகன் மற்றும் கணவருடன் மும்பையில் வசித்துவரும் இவர் அவ்வப்போது துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மகனுடன் டிக் டாக் போடுவது என இருந்துவரும் இவர் தற்போது மாஸ் ஹிட் பாடலான புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் ஆடி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

யார் இந்த வீடியோவுக்கு லைக் போட்டாங்களோ இல்லையோ, 90ஸ் கிட்ஸ் லைக்குகளை வாரி இறைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன