ஆர்யன் டூ அனயா.. பெண்ணாக மாறிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் மகன்.. இணையத்தில் வைரலாகும் பின்னணி..

முன்பெல்லாம் ஒருவர் திருநங்கையாகவோ அல்லது ஆண் குணத்தை கொண்ட பெண்ணாகவோ, பெண் குணத்தை கொண்ட ஆணாகவோ இருக்கும் போது இந்த சமுதாயம் மிகப்பெரிய அளவில் அவர்களை மோசமாக சித்தரித்து தான் கருத்துக்களை தெரிவிக்கும். ஆனால்…

aryan to anaya bangar

முன்பெல்லாம் ஒருவர் திருநங்கையாகவோ அல்லது ஆண் குணத்தை கொண்ட பெண்ணாகவோ, பெண் குணத்தை கொண்ட ஆணாகவோ இருக்கும் போது இந்த சமுதாயம் மிகப்பெரிய அளவில் அவர்களை மோசமாக சித்தரித்து தான் கருத்துக்களை தெரிவிக்கும். ஆனால் சமீப காலமாக ஒருவரது தனிமனித சுதந்திரம் என்ற விஷயம் மக்கள் மத்தியில் மிகப் பரவலாக பேசப்பட்டு வருவதால் தங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அதே போல இருந்து கொள்ளலாம் என்பதும் பலரின் விருப்பமாக உள்ளது.

அந்த வகையில் பெண்ணாக இருக்கும் பலரும் ஆணாக இருக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் உடல் பாகங்கள் தொடங்கி அனைத்தையுமே ஒரு ஆணாக மாற்றிக் கொண்டு திருநம்பியாக வாழ்ந்து வருகின்றனர். இன்னொரு பக்கம் பெண்களாக மாறத் துடிக்கும் பல ஆண்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் தங்களது பாலினத்தையும் மாற்றிக் கொண்டு மிக சுதந்திரமாக தங்களுக்கு விருப்பமான வாழ்க்கையின் இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றனர். இதற்காக நிறைய அர்ப்பணிப்பு, ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட விஷயங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த முடிவிற்கு தற்போதும் பல இடங்களில் எதிர்ப்பு இருந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி தங்களுக்கு தோன்றுவது போல வாழ்ந்து விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளாமலும் பலர் இருந்து வரும் நிலையில் தான் பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் மகனும் தற்போது பெண்ணாக மாறி உள்ளது தொடர்பான செய்தி இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தான் சஞ்சய் பங்கர். இவர் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்து வந்த நிலையில் தான் அவரது மகனான ஆர்யன், வெளிநாட்டில் தங்கி வந்த நிலையில் கடந்த வருடமே பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது. மேலும் தனது பெயரையும் ஆர்யன் என்றதில் இருந்து அனயாவாக அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.
sanjay bangar and son aryan

தான் பெண்ணாக மாற விரும்பியதுடன் மட்டுமில்லாமல் இதற்காக பல அர்ப்பணிப்பு, தியாகங்கள் உள்ளிட்டவற்றையும் ஆரியன் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக இவரும் தந்தையை போல வெளிநாட்டில் கிரிக்கெட் க்ளப்பில் இணைந்து ஆடி வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. ஆனால் தற்போது மூன்றாம் பாலினத்தவராக அவர் மாறி உள்ளதால் சில நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் விதிப்படி அவர் தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவது கடினம் தான் என்றும் தெரிகிறது.

இப்படித்தான் விரும்பியது போல பெண்ணாக மாறுவதற்கு தனக்கு பிடித்த கிரிக்கெட் போட்டியை ஆடும் வாய்ப்பையே அவர் தியாகம் செய்துள்ள நிலையில் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பல விதமான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.