த்ரிஷா, நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா மந்தனா… அடேங்கப்பா… சம்பளம் இத்தனை கோடியா…?

நேஷனல் க்ரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டை என்ற ஊரில் பிறந்தவர். ஆரம்பத்தில் மாடலிங் செய்து வந்த ராஷ்மிகா, 2014 ஆம் ஆண்டு ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’வின் க்ளீன்&க்ளியர் பிரெஷ் பேஸ் விருதை பெற்றார். இது அவர் சினிமா துறையில் நுழைய வழிவகுத்தது.

தெலுங்கு சினிமாவில் முதன்மையாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா தமிழ், கன்னடம். இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ‘கிரீக் பார்ட்டி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. முதல் படமே அதிக வசூல் செய்து வெற்றிப் படமாக ராஷ்மிகாவிற்கு அமைந்தது.

2018 ஆம் ஆண்டு ‘சாலோ’ என்ற திரைப்படத்தின் வாயிலாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் நடித்தார். இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று இந்தியவின் நேஷனல் க்ரஷாக ராஷ்மிகா மந்தனா மாறினார்.

2021 ஆம் ஆண்டு கார்த்திக்கு ஜோடியாக ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றார். அதே ஆண்டு மிகப்பெரிய ஹிட் படமான ‘புஷ்பா’ படத்தில் நடித்து முன்னணி நடிகையானார். ரன்வீர் கபூருடன் இணைந்து இந்தியில் ‘அனிமல்’ படத்தில் நடித்து பான் இந்தியா ஹீரோயின் ஆக வலம் வருகிறார் ராஷ்மிகா. இந்த ஆண்டு ‘புஷ்பா- 2’ வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பல படங்களில் கமிட் ஆகி இருக்கும் ரஷ்மிகா மந்தனா முன்னணி நடிகைகளான த்ரிஷா மற்றும் நயன்தாராவை சம்பள விஷயத்தில் ஓவர்டேக் செய்துள்ளார். அடுத்ததாக கமிட் ஆகியிருக்கும் ‘சிக்கந்தர்’ என்ற படத்திற்கு ரூ. 13 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம் ராஷ்மிகா மந்தனா.