இந்தியன் படத்துல சொல்லப்படாத இவ்ளோ விஷயங்கள் இருக்கா? படத்தில் மிரள வைக்கும் Secrets

இந்தியன் 2 படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியன் முதல் பாகத்தின் மேக்கிங் காட்சிகள் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஜென்டில்மேன், காதலன் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக ஷங்கர் இயக்கத்தில் 1996-ல் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன். அதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் செய்யாத வசூல் சாதனையை செய்தது. குறிப்பாக ரஜினியின் பாட்ஷா படத்தின் சாதனையையும் முறியடித்தது.

தற்போது இந்தியன் 2 திரைப்படமும் மிக அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் உலகநாயகன் கமலுடன் சித்தார்த், விவேக், ரகுல்பிரீத்தி சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். முதல் பாகத்தில் மேக்கிங்கில் தனது பிரம்மாண்டத்தைக் காட்டியிருப்பார் இயக்குநர் ஷங்கர்.

குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகள். விமான நிலையத்தில் விமானம் வெடித்துச் சிதறும் காட்சி ரசிகர்களை உறைய வைக்கும். இந்தக் காட்சிக்காக அனுமதி கிடைப்பதில் மிகச் சவாலாக இருந்ததாம். அந்தக் காலகட்டத்தில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமே இருந்திருக்கிறது.

இதில் அனுமதி பெற்று விமானம் போன்ற செட் போட்டு அதில் கிளைமேக்ஸ் காட்சிக்காக 2 டேங்கர் லாரிகள் நிறைய பெட்ரோல் பயன்படுத்தப்பட்டதாம். மேலும் ராணுவ விமான நிலையத்திலும் அனுமதி பெற்று இக்காட்சியைப் படமாக்கி இருப்பார்கள். இதற்கு அடுத்தாக பாடல்கள் கப்பலேறி போயாச்சு.., அக்கடா.. பாடல்களில் இந்திய கலாச்சாரத்தின் அத்தனை உடைகளிலும் ஹீரோ, ஹீரோயின் நடனம் ஆடுவது போல் காட்சிகள் அமைந்திருக்கும்.

சைக்கிள் வாங்கவே கஷ்டபட்ட இயக்குநர்.. ஆடி காரில் மாப்பிள்ளையாகச் சென்று சாதித்த அசத்திய சம்பவம்

டெலிபோன் மணிபோல் பாடலில் கதைப்படி ஹீரோயின் புளு கிராஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அப்பாடல் முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு விலங்குகள் அங்கும் இங்கும் ஓடும்படி படமாக்கப்பட்டிருக்கும். இதில் கங்காரு உள்ளிட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டது. கப்பலேறி போயாச்சு பாடலுக்கு பின்னயில் உள்ள நடனக் கலைஞர்கள் சுமார் 1500 பேருக்கு இந்திய கதர் ஆடை காஸ்ட்டியூம் போடப்பட்டு படமாக்கப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியன் தாத்தா வேடமானது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படி இந்தியன் படம் முழுக்க பல்வேறு பிரம்மாண்டங்கள் நிறைந்துள்ளன. வரவிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்யுமா என்று பொறுத்திருந்தது காண்போம்.