25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையப் போகும் பிரபுதேவா-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி..

இந்திய சினிமாவில் இசைக்கு எப்படி ஏ.ஆர். ரகுமான் இசைப்புயலோ அதேபோல் நடனத்திற்கு பிரபுதேவாவை நடனப் புயல் என்று ரசிகர்கள் அழைப்பதுண்டு. ஆசியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படும் பிரபுதேவா தனது தனித்துவ நடன அசைவுகளால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

இவரும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து உருவாக்கிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. அவற்றில் குறிப்பாக காதலன், மின்சாரக் கனவு, ஜென்டில்மேன் (சிக்குபுக்கு ரயிலே பாடல் மட்டும்), மிஸ்டர் ரோமியோ,  லவ் பேர்ட்ஸ் போன்ற படங்களின் பாடல்கள் பெரிதும் வரவேற்பினைப் பெற்றது. பிரபுதேவாவின் அசத்தல் நடனமும், ஏ.ஆர்.ரஹ்மான் எனர்ஜிக் இசையும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

ஆனால் அதன்பிற்கு பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரும் இணையவில்லை. எனினும் அவர்கள் உருவாக்கிய ஆல்பங்கள் இன்றும் ரசிகர்களைக் கவரும் வகையில் சோஷியல் மீடியாக்களில் வலம் வருகிறது. இந்நிலையில் தற்போது மின்சாரக் கனவு படத்திற்கு அடுத்தபடியாக மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு மூன் வாக் என்று பெயரிடப்பட்டுள்ளது.

பளபளன்னு வந்த பார்சல்.. ஆசையாய் திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உள்ளே பதுங்கியிருந்த விஷ ஜந்து..

பொதுவாக பிரபுதேவா பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் அடையாளமான மூன்வாக் ஸ்டெப்பை அசால்ட்டாக தனது நடனத்தில் பயன்படுத்துவார் என்பதால் அதையே இப்படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இப்படத்தினை மனோஜ் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் மூன் வாக் திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.