சிவகார்த்திகேயன் – ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் இணையும் பிரபல நடிகர்! தளபதி இல்லாத குறையை தீர்ப்பாரோ?

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தனது மீடியா பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

அதன்மூலம் மக்களின் அபிமானங்களை பெற்ற சிவகார்த்திக்கேயன் தமிழில் 3 என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார். அவரை அறிமுகப்படுத்தியது நடிகர் தனுஷ் தான். அந்த படத்தில் ஒரு துணை நடிகராக நடித்தார் சிவகார்த்திகேயன்.

அவருடைய நடிப்பையும் திறமையும் பார்த்து தனுஷ் சிவகார்த்திகேயனுக்காக ஒரு சில இயக்குனர்களிடம் கதை இருந்தால் சொல்லுங்கள் என சிபாரிசும் செய்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் மெரினா திரைப்படம்.

அந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன் பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என காமெடி ஜோன்களில் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

குறுகிய காலத்திலேயே ஒரு முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். இப்போது அஜித் விஜய் இவர்களுக்கு அடுத்தபடியான ஒரு அந்தஸ்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் அவருடைய 23வது படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்சன் களத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு வெளியான தர்பார் படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் எந்த ஒரு படத்தையும் தமிழில் இயக்கவில்லை. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் இந்தப் படம் தான் இப்போது தயாராகிக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் பிரபல நடிகர் விக்ராந் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ராந்தை பொருத்தவரைக்கும் விஜய்க்கு உறவுக்காரர். ஒரு சாயலில் விஜய் மாதிரியே தோற்றத்திலும் இருக்கிறார்.

இருந்தாலும் விஜய் அளவுக்கு இவரால் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பொழுது தான் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார் விக்ராந்த். கூடிய சீக்கிரம் இவரையும் ஒரு பெரிய இடத்தில் பார்ப்போம்.