இந்தியன் 2 படத்தோட ரிலீசானால் என்ன? என்னை நிரூபிக்க இது போதும்.. சேலஞ்ச் காட்டும் பார்த்திபன்

சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படம் வரும் 12-ம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. ஏழு வருட போராட்டத்திற்கு பிறகு இந்த படம் இப்பொழுதுதான் ரிலீஸ் ஆக இருக்கின்றது.

அதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த வருகிறது. லைக்கா தயாரிப்பு அவர்களுடன் இணைந்து ரெட் ஜெயன்ட் நிறுவனமும் தயாரிப்பு சங்கரின் பிரம்மாண்டம் என பல பெரிய கூட்டணியின் இந்த படம் உருவாவது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களுக்கும் ஒரு பெரிய எதிர்பார்ப்பாகவே இருந்து வருகிறது .

இதற்கெல்லாம் மேலாக கமல் இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்களில் நடித்திருக்கிறார் என்பதுதான். பொதுவாகவே ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீசாகும் பட்சத்தில் அந்த தேதியில் வேறு எந்த படங்களும் ரிலீஸ் ஆகாது. ஆனால் பார்த்திபன் நடிக்கும் டீன்ஸ் திரைப்படம் அதே தேதியில் தான் ரிலீசாக இருக்கின்றது.

இது பார்த்திபனின் ஒரு தைரியம் என்று சொல்லலாம். இதைப்பற்றி ஒரு பேட்டியில் பார்த்திபணே கூறுகிறார். அதாவது பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது சின்ன படங்கள் ஏன் ரிலீஸ் ஆகக்கூடாது? இந்தியன் 2 படத்தோட என் படத்தை ரிலீஸ் செய்யும் போது ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை என பல பேர் என்னை கேட்கிறார்கள்.

மொத்தம் ஆயிரம் தியேட்டர்கள் எனில் இந்தியன் 2 படத்திற்கு 900 தியேட்டர்கள் வரட்டும். எனக்கு 100 தியேட்டர் கிடைத்தால் போதும். அதில் நான் என்னை நிரூபிப்பேன். அது என்னுடைய பிரச்சனை. இதில் மத்தவங்களுக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை.

ஒருவேளை அவர்கள் நம் நல விரும்பிகளாக கூட இருக்கலாம் என பார்த்திபன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். பொதுவாக பார்த்திபனின் சமீப கால படங்கள் பெரும்பாலும் ஒரு எக்ஸ்பிரிமெண்ட் படமாகவே இருக்கின்றன. அதைப்போல இந்த டீன்ஸ் திரைப்படமும் ஒரு புதுமையான முயற்சியாக கூட இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவருடைய இந்த படைப்பும் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.