என்னுடைய ரசிகர்கள் தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்… மும்தாஜ் வேண்டுகோள்…

மும்பையில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் மும்தாஜ். தனது பள்ளிப்படிப்பை பாந்திராவில் மவுண்ட் மேரிஸ் கான்வென்ட் பள்ளியில் படித்து முடித்தார். தனது பள்ளியில் நடன நிகழ்ச்சியில் ஆடியபோது தயாரிப்பாளர் சுதாகர் போகட்டே கண்டு தனது படத்தில் நடிக்க வைத்து திரையுலகில் அறிமுகப்படுத்தினார்.

1999 ஆம் ஆண்டு டி. ராஜேந்தர் இயக்கிய ‘மோனிஷா என் மோனலிசா’ திரைப்படத்தில் பாப் பாடகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் வரும் ‘ஹலோ ஹலோ’ பாடல் அந்த காலத்தில் பிரபலமானது. அடுத்ததாக எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்தார் மும்தாஜ்.

2000 ஆம் ஆண்டு எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் மற்றும் ஜோதிகாவுடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்தார் மும்தாஜ். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. இப்படத்தில் வரும் ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடலில் கவர்ச்சியாக நடித்து புகழடைந்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார் மும்தாஜ்.

குஷி படத்தின் வெற்றிக்குப் பிறகு பட வாய்ப்புகள் மும்தாஜை தேடி வந்தன. கவர்ச்சி நடிகையாகவே தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்தார் மும்தாஜ். தொடர்ந்து ‘ஸ்டார்’, ‘சாக்லேட்’, ‘வீராசாமி’, ‘ஜெர்ரி’ போன்ற படங்களில் நடித்துள்ளார் மும்தாஜ். இது தவிர சில படங்களில் ஒற்றை பாடல்களிலும் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளார் மும்தாஜ். இறுதியாக விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 2இல் கலந்துக் கொண்டார் மும்தாஜ்.

அதற்குப் பிறகு திரையுலகில் இருந்து விலகி இஸ்லாம் மார்க்கத்தில் தீவிர ஆன்மீகவாதியாக மாறிவிட்டார் மும்தாஜ். தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட மும்தாஜ், நான் இறைவனை தேடி ஆன்மீகத்தில் பயணித்து கொண்டிருக்கிறேன், என்னுடைய ரசிகர்கள் மற்றும் இன்றைய இளம் சினிமா ரசிகர்கள் என்னுடைய பழைய புகைப்படங்களையும், விடியோக்களையும் தயவுசெய்து பார்க்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் மும்தாஜ்.