இந்திய சினிமாவே தங்கலான் படத்துக்கு தயாராகுங்கள்..ஜி.வி.பிரகாஷ் போட்ட எக்ஸ் தள பதிவு..

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய சீயான் விக்ரமின் 61-வது படமாக வெளிவர உள்ள திரைப்படம் தான் தங்கலான். இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரமுடன் பார்வதி மேனன், பசுபதி, மாளவிகா மோகனன் போன்றோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பினைப் பெற்றது. சீயான் விக்ரம் படங்கள் என்றாலே அதில் நடிப்புத் திறனுக்குப் பஞ்சம் இருக்காது. எவ்வளவு தூரம் கதாபாத்திரத்திற்காக உழைக்க முடியுமோ அதன் இறுதிவரை சென்று அந்தக் கதாபாத்திரமாகவே உருமாறுபவர் விக்ரம். அந்த வகையில் தங்கலான் படமும் வரலாற்று பின்னனி கொண்ட படமாகத் தயாராகி வருகிறது.

வழக்கமாக பா. ரஞ்சித் தனது படங்களில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. ஆனால் தங்கலான் படத்திற்கு இசையமைப்பளார் ஜி.வி.பிரகாஷ் உடன் முதன் முறையாகக் கை கோர்த்திருக்கிறார் பா.ரஞ்சித். இயக்குநர் வெற்றி மாறனின் விடுதலை படம் தவிர மற்ற படங்களில் ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்குப் பக்க பலமாக இருக்கும்.

தளபதி 69-ல் கிட்டத்தட்ட உறுதியான இயக்குநர்..? ஹீரோயின் யார் தெரியுமா?

குறிப்பாக பின்னனி இசை மிரட்டும். அதேபோல் இந்த முறை பா.ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் படத்திற்கும் மிரட்டும் இசையைத் தந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில் படம் பற்றி இன்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட ஜி.வி.பிரகாஷ், தங்கலான் படத்தின் பின்னனி இசைப் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. டிரைலரும் அற்புதமாக வந்துள்ளது. இந்திய சினிமாவே தங்கலான் படத்திற்குத் தயாராகுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் விக்ரமுக்கு சேலோவாகக் கடைசியாக ஹரி இயக்கத்தில் வெளியான சாமி 2 படம் ஹிட் ஆனது. மேலும் 2016-ல் இருந்து தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பைனான்ஸ் பிரச்சினையால் பெட்டிக்கள் முடங்கிக் கிடக்கிறது. எனவே தங்கலான் படம் அவருக்கு மற்றுமோர் பெரிய வெற்றியைத் தேடித் தரும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.