கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் பற்றிய கஸ்தூரியின் சர்ச்சைக்குள்ளான X தள பதிவு…

கஸ்தூரி சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். 1992 ஆம் ஆண்டு ‘மிஸ் மெட்ராஸ்’ அழகி போட்டியில் பட்டம் வென்றவர். அதன் மூலம் சினிமா வாய்ப்பினை பெற்றவர்.

1991 ஆம் ஆண்டு ‘ஆத்தா உன் கோவிலிலே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த கஸ்தூரி பின்னர் விஜயகாந்த், கமலஹாசன், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

‘சின்னவர்’, ‘செந்தமிழ் பாட்டு’, ‘எங்க முதலாளி’, ‘அமைதிப்படை’, ‘ஆகாய பூக்கள்’, ‘இந்தியன்’, ‘சுயம்வரம்’, போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் கஸ்தூரி. தனது குடும்ப பாங்கான முகத்திற்காகவும் எதார்த்தமான நடிப்பிற்க்காகவும் ரசிகர்களைக் கொண்டவர்.

இது தவிர, சன் டிவி, பிபிசி, ஏசியா நெட், புதுயுகம், ஈடிவி, டிடி மலையாளம் போன்ற சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களிலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் பங்கேற்றவர் கஸ்தூரி. விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகவும் கலந்துக் கொண்டார்.

தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தது பரபரப்பாக தமிழ்நாட்டில் பேசப்பட்டு வருகிறது. இறந்தவர்களுக்கு 10 இலட்சம் ருபாய் இழப்பீடு தருவதாக அரசு அறிவித்துள்ளது. இதைப் பற்றி சர்ச்சைக்குள்ளாகும் வகையை கஸ்தூரி X தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர், 10 இலட்சம் இழப்பீடு விளையாட்டு வீரருக்கா? போரில் உயிர் நீத்தவருக்கா? விஞ்ஞானிக்கா? அல்லது விவசாயிக்கா? குடும்பத்தை கைவிட்டு கள்ளச்சாராயம் குடித்தவருக்கு 10 இலட்சம் இழப்பீடா? இதுதான் உங்கள் ஆட்சியா? என்று பதிவிட்டு சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் கஸ்தூரி.