அவ்வை சண்முகி படத்தில வயதான பெண்மணி கதாபாத்திரத்தில் நடிக்க கமலஹாசன் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்…கே. எஸ். ரவிக்குமார் பகிர்வு…

By Meena

Published:

கே. எஸ். ரவிகுமார் தமிழ் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர் என பன்முகங்களைக் கொண்டவர். இயக்குனர்கள் பாரதிராஜா, ராமதாஸ், நாகேஷ், ராமராஜன், விக்ரமன் கே. ரங்கராஜ் ஆகியோருக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்ததன் மூலம் தனது சினிமா வாழக்கையை தொடங்கியவர்.

1990 ஆம் ஆண்டு ‘புரியாத புதிர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். 1991 ஆம் ஆண்டு ‘சேரன் பாண்டியன்’ படத்தை இயக்கி அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் வெற்றிப் பெற்றதன் மூலம் பிரபலமானார் கே. எஸ். ரவிக்குமார்.

1994 இல் ‘நாட்டாமை’, 1995 இல் ‘முத்து’ என இரண்டு மிகப்பெரிய ஹிட் படங்களை இயக்கி புகழடைந்தார் கே. எஸ். ரவிக்குமார். அடுத்ததாக கமல்ஹாசனை பெண் வேடத்தில் நடிக்க வைத்து ‘அவ்வை சண்முகி’ படத்தை இயக்கினார். இப்படமும் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.

‘படையப்பா’, ‘நட்புக்காக’, ‘மின்சார கண்ணா’, ‘பாட்டாளி’, ‘சமுத்திரம்’, ‘வில்லன்’, ‘தசாவதாரம்’, ‘லிங்கா’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், சிறப்பு தோற்றத்தில் நடிகராகவும் வலம் வந்தவர் கே. எஸ். ரவிக்குமார்.

தற்போது, ஒரு நேர்காணலில் சினிமா அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட கே. எஸ். ரவிக்குமார், கமலஹாசன் எவ்வளவு அர்பணிப்பான நடிகர் என்பதை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், ‘அவ்வை சண்முகி படத்தில் வயதான பெண்மணி கதாபாத்திரத்தில் கமலஹாசன் நடிக்க முகத்தில் நிறைய மேக்அப் போட்டிருந்தோம். அவரால் வாயை திறக்க முடியாது. அதனால் மேக்அப் போடுவதற்கு முன்பே காலையில் நான்கு மணிக்கே சாப்பிட்டு விட்டு நடிக்க வந்துவிடுவார். மேக்அப் போட்ட பின்பு நாள் முழுவதும் ஜூஸ் மட்டுமே குடித்துக் கொண்டு நடிப்பார் கமலஹாசன் என்று கூறியுள்ளார் கே. எஸ். ரவிக்குமார்.