ஒரே டீசரை வெளியிட்டு.. பிரதீப் ஆண்டனி பிஆர் டீம் சோலியை முடித்த உலக நாயகன்.. தக் லைஃப் தான்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், ஜெயம் ரவி, திரிஷா மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் கமல்ஹாசனின் 234 வது படத்திற்கு தக் லைஃப் என தலைப்பிட்டுள்ளனர். அது தொடர்பான வீடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களிடம் மோசமாக நடந்து கொண்டதாக பல போட்டியாளர்கள் புகார் அளித்த நிலையில் அதனை விசாரித்த கமல்ஹாசன் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார்.

பிரதீப் ஆண்டனி டிரெண்டிங் காலி

அதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட பிரதீப் ஆண்டனிக்காக பரிந்து பேச முன்வர காரணமே ரஜினிகாந்தின் ரசிகர்கள் செய்த வேலைதான் எனக் கூறப்படுகிறது,

மேலும், பிக் பாஸ் கவின் போட்டோ ட்வீட் காரணமாக பிரதீப் ஆண்டனி ஹாஸ்டெக் ட்ரெண்ட் ஆனது. அதன் மூலம் இம்பிரஷன் தேட பல பிக் பாஸ் போட்டியாளர்களும், பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காத ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சோசியல் மீடியா இன்புளூயன்சர்களும் பிரதீப் ஆண்டனிக்கு செய்தது சரியா? இல்லை தவறா? என கமல்ஹாசனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

தக் லைஃப் கமல்ஹாசன்

கமல்ஹாசன் 60 ஆண்டுகளை தாண்டி சினிமாவில் இன்னமும் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வரும் நிலையில், அவரை எந்த அளவுக்கு இழிவாக பேச முடியுமோ அந்த அளவுக்கு இழிவாக பேசி ரேகாவுக்கு அவர் கொடுத்த முத்தம் பற்றி எல்லாம் கிண்டி அவர் இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக் கூடாது என்றெல்லாம் பதிவிட்டு வந்தனர்.

ஆனால், அந்த ட்ரெண்டை அடித்து நொறுக்கும் அளவுக்கு ஒரே ஒரு டீசரை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையதள வாசிகளையும் உலகநாயகன் புகழ் பாட வைத்துள்ளார். மருதநாயகம் படம் மிஸ் ஆன நிலையில் அதே லுக்கில் அதைவிட வெறித்தனமான ஒரு ஆக்சன் சம்பவத்தை கமல் செய்யப் போகிறார் என்பதை இந்த சின்ன அறிமுகக் டீசர்லையே உணர்த்தியுள்ளார் உலகநாயகன்.

நாளை கமல்ஹாசன் பிறந்தநாள் பிரம்மாண்டமாக கொண்டாட உள்ள நிலையில், அடுத்தடுத்த அறிவிப்புகளும் வெளியாக உள்ளன. எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ள படத்தின் டைட்டில் எப்போது அறிவிக்கப்படும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கல்கி படத்தில் இருந்து கமல் லுக் வெளியாகுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.