ஜெயிச்சிட்ட ஜானே!.. சூப்பர் சிங்கர் சீசன் 10ன் டைட்டில் வின்னர் இவர் தான்!.. என்ன பரிசு தெரியுமா?..

விஜய் டிவியில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெற்றது. பல சுற்றுகளை வெற்றிகரமாக கடந்து கிராண்ட் ஃபினாலே சீசனுக்கு 5 போட்டியாளர்கள் வந்தனர்.

ஜீவிதா, ஸ்ரீநிதி, ஜான் ஜெரோம், விக்னேஷ் மற்றும் வைஷ்ணவி உள்ளிட்ட போட்டியாளர்கள் கிராண்ட் ஃபினாலே சுற்றுக்கு தகுதி பெற்றனர். நேரு ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3:00 மணிக்கு தொடங்கிய கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது.

போட்டியாளர்கள் ஐந்து பேரும் சூப்பர் ஹிட் பாடல்களை தேர்வு செய்து இறுதிச் சுற்றில் பாடி அசத்தி நடுவர்களையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தினர். இறுதியாக மக்கள் ஓட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில், அந்த வாக்குகளின் அடிப்படையில் ஜான் ஜெரோம் டைட்டில் வின்னர் ஆக தேர்வானார். டைட்டில் வின்னர் 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாவது இடம் பிடித்த ஜீவிதாவுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை பிடித்த வைஷ்ணவிக்கு 5 இலட்சம் பரிசுத்தொகை வழங்கினர். நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்த போட்டியாளர்களுக்கு தல 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

ஜான் ஜெரோம் வெற்றியை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜானின் தந்தை உணர்ச்சி வசப்பட்டு உப்பு கல்லை வைரமாக விஜய் டிவி மற்றும் சூப்பர் சிங்கர் நடுவர்கள் மாற்றிவிட்டனர் என பேசினார். சக போட்டியாளர் வெற்றிப் பெற்ற ஜானுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படியொரு வெற்றி கிடைக்கும் என நினைக்கவில்லை. அனைவருக்கும் நன்றி என ஜான் ஜெரோம் கூறினார்.