ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவுக்கு இதுதான் காரணமா? பிரபலம் சொல்லும் பின்னணி

ஜெயம் ரவியும், ஆர்த்தியும் மனதளவில் பிரிந்துள்ளார்கள். விரைவில் விவாகரத்து என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி இதுகுறித்து சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். என்னன்னு பார்ப்போமா…

ஜெயம் ரவியைப் பொருத்தவரை ரசிகைகள் அதிகம். ஜெயம் ரவியும், ஆர்த்தியும் பிரிஞ்சதுக்கு சில ரசிகைகள் 3 நாளாக சாப்பிடாமல் கிடந்தார்களாம். இதுக்கு முன்னாடி தனுஷ் ஐஸ்வர்யா, சைந்தவி, ஜி.வி.பிரகாஷ் ஜோடி எல்லாம் பிரிந்தது நமக்கு தெரிந்த விஷயம். இதனால நடிகர்களின் பிம்பம் தொடர்ச்சியா உடைய ஆரம்பிக்குது.

சினிமாக்காரங்க எல்லாம் இப்படித்தான் இருப்பாங்கன்னு சொல்றாங்க. விஜய் கூட கல்யாணம் ஆகி 24 வருஷமாச்சு. கிட்டத்தட்ட மனைவி வெளியே இருக்காங்களாம். கட்சியும் ஆரம்பிச்சிட்டாரு. இனி கல்யாணம் பண்ணினா என்ன சொல்வாங்க.

சரி இந்த மாதிரியே இருக்கட்டும்னு விஜய் இருப்பாரு போல இருக்கு. நடிகர்களைப் பின்பற்றக்கூடிய அப்பாவி ரசிகர்கள் நிறைய பேரு இருக்காங்க. அதனால் தான் விஜய் வீட்டு முன்னாடி வெறித்தனமா கத்துறாங்க.

பொதுவாகவே நடிகர்களைப் பார்க்கிறவங்க இவங்களை மாதிரி நாமளும் வந்தா என்ன என்று கூட நினைக்கலாம். ஜெயம்ரவிக்கு ஒரு பேரு இருக்கு. அது உண்மையிலேயே இப்போ உடைஞ்சிருக்கு.

படிக்காத பாமரன்கிட்ட இருக்குற விட்டுக்கொடுக்கற தன்மை படிச்சவன்கிட்ட இல்லையே என்று கேள்வி எழுகிறது. ஆனால் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் சின்ன சின்ன தவறுகள் நடந்திருக்கலாம்.

ஆனா அந்தத் தலைமுறையில ஜெமினியைத் தவிர வேறு யாரு பேரும் அடிபடவில்லை. சாகறப்போ கூட நாலாவது கல்யாணம் பண்ணினதா பேசிக்கிட்டாங்க.

Jayam Ravi
Jayam Ravi

ரஜினி, கமல் தலைமுறையில கமல் மட்டும் பிரிஞ்சாரே தவிர குடும்பத்தை அவர் பார்த்துக்கிட்டு இருக்காரு. கணவன், மனைவிக்குள் பிரச்சனை வரலாம். அவங்க ரெண்டு பேருக்கும் வேண்டியவங்க இருப்பாங்க.

அவங்க வயசானவரா இருப்பாங்க. என்ன செய்யலாம்னு கேட்கலாம். அவரோட அனுபவத்தைச் சொல்வாரு. அதைக் கேட்டு ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம்.

இருவரும் உடல் ரீதியான உறவு வைக்க விரும்ப வில்லை என்றால் வேறு வேறு அறைகளிலாவது வீட்டில் தங்கலாம். படித்தவர்கள் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டால் என்ன குறையப்போகுது?

ஜெயம் ரவிக்கு 2 குழந்தைகள் இருக்கு. நமக்கான வாழ்க்கை அப்போ 50 சதவீதம் குறையுது. அவங்களுக்காக 50 சதவீதம் வாழ வேண்டும். குழந்தைக்கு அப்பா, அம்மா எப்போதும் கூட இருக்க வேண்டும். இப்படி எல்லாம் இருக்காம எந்த முகத்தை வச்சிக்கிட்டு படத்துல நடிக்கிறீங்க.

சமீபத்தில் மகளுக்காக ஏங்குற மாதிரி படத்துல நடிச்சிருப்பார். இந்தக் கேள்வி ஜெயம் ரவிக்கு மட்டுமல்ல. இப்படி பிரிந்த அத்தனை சினிமாக்காரங்களுக்குமானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.