சமீபத்தில் திருமணம் ஆன பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் இவ்வளவு வயது வித்தியாசமா…?

இசைஞானி இளையராஜா அவர்களின் சகோதரரான இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களின் இளைய மகனும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரும் தான் பிரேம்ஜி அமரன். இவர் தமிழ் சினிமாவின் நடிகர், நகைச்சுவை நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார்.

இசையமைப்பதில் ஆர்வம் கொண்ட பிரேம்ஜி தனது பெரியப்பா இளையராஜாவின் மகனான அண்ணன் யுவன் ஷங்கர் ராஜாவிடம் உதவியாளராக சேர்ந்து தனது வாழக்கையை தொடங்கினார். பின்னர் பிண்ணனியில் யுவன் ஷங்கர் ராஜாவின் ராப் பாடல்களை பாடினார்.

2006 ஆம் ஆண்டு சிம்பு நடித்த ‘வல்லவன்’ திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை- 600028’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நகைச்சுவை ரோலில் நடித்திருந்தார் பிரேம்ஜி. இப்படம் ஹிட்டானது.

தொடர்ந்து ‘மங்காத்தா’, ‘சேட்டை’, ‘கோவா’ ‘சென்னை- 600028 பாகம் 2’ ஆகிய படங்களில் நகைச்சுவை கதாபத்திரத்தில் தோன்றி அனைவரையும் சிரிக்க வைத்தார் பிரேம்ஜி. ‘என்ன கொடுமை சார் இது’, ‘எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா’ ஆகிய வசனங்கள் பிரேம்ஜி பேசி பிரபலமானது. தனது முக பாவனைகளால் அனைவரையும் சிரிக்க வைத்து விடுவார் பிரேம்ஜி.

நீண்ட நாட்களாக பேச்சிலராக இருந்த பிரேம்ஜிக்கு தற்போது சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், பிரேம்ஜிக்கு 45 வயது எனவும் அவரது மனைவிக்கு 25 வயது, இருவருக்கும் 20 வயது வித்தியாசம் என்ற தகவல் வெளியாகி பேச்சுப்பொருளாக ஆகியுள்ளது.