இந்த கதாபாத்திரத்தில் நடித்த பெருமை என் வாழ்நாள் முழுவதும் இருக்கும்… சாயாஜி சிண்டே பகிர்வு…

மஹாராஷ்டிரா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர் நடிகர் சாயாஜி சிண்டே. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளின் நாடகங்கள் மற்றும் படங்களில் நடிப்பவர். நாடகத்தின் மீதும் நடிப்பின் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர் சாயாஜி சிண்டே.

1978 ஆம் ஆண்டு மராத்தி நாடகங்களில் நடித்து தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர். மராத்தி திரைப்படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமானார் சாயாஜி சிண்டே. சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையின் மூலம் வாய்ப்புகளை பெற்றவர் சாயாஜி சிண்டே.

2000 ஆம் ஆண்டு தமிழில் ‘பாரதி’ திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார் சாயாஜி சிண்டே. பாரதியாரின் தோற்றம் அப்படியே சாயாஜிக்கு பொருந்தியது. இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக 2001 ஆம் அஜித் மற்றும் ஜோதிகா நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான ஜோதிகாவின் அப்பாவாக நடித்து புகழடைந்தார் சாயாஜி சிண்டே.

2003 ஆம் ஆண்டு விக்ரம் நடித்த ‘தூள்’ திரைப்படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரம் ஏற்று வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் சாயாஜி சிண்டே. தொடர்ந்து ‘பாபா’, ‘படிக்காதவன்’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘ஆதவன்’, ‘வேட்டைக்காரன்’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘காலா’, ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் சாயாஜி சிண்டே.

தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சாயாஜி சிண்டே தமிழ் திரையுலகில் தனது பயணத்தை பற்றி பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், நான் எத்தனை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும்சுப்ரமணிய பாரதியார் கதாபாத்திரத்தில் நடித்ததை என் உயிர் உள்ளவரை மறக்க முடியாது. பாரதியார் கதாபாத்திரத்தில் நடித்த பெருமை என் வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்று பகிர்ந்துள்ளார் சாயாஜி சிண்டே.