நான் இவர் கையால் தான் முதல் சம்பளத்தை வாங்கினேன்… ஏ. ஆர். முருகதாஸ் எமோஷனல்…

ஏ. ஆர். முருகதாஸ் தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சியில் பிறந்தவர். ஏ. ஆர். முருகதாஸ் தமிழ் சினிமாவின் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஓவிய கதைகளை எழுதியவர் ஏ, ஆர். முருகதாஸ்.

பின்னர் பி. கலைமணியிடம் உதவி எழுத்தாளராக பணிபுரிந்தார். 1997 ஆம் ஆண்டு ‘ரட்சகன்’ திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். சில படங்களில் உதவி வசன இயக்குனராக பணிபுரிந்தார். அடுத்து இயக்குனர் எஸ். ஜே. சூர்யாவுடன் இணைந்து ‘குஷி’ படத்தில் பணியாற்றினார்.

2001 ஆம் ஆண்டு எஸ். ஜே. சூர்யா அவர்களின் பரிந்துரையால் அஜித்தை வைத்து அதிரடி திரைப்படமான ‘தீனா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே வெற்றித் திரைப்படமாக ஏ. ஆர். முருகதாஸ்க்கு அமைந்தது. நடிகர் அஜித்துக்கும் ‘தீனா’ திரைப்படம் அவரது கேரியரில் முக்கியமான இடத்தை பிடித்தது.

தொடர்ந்து ‘ரமணா’, ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கத்தி’, ‘ஸ்பைடர்’, ‘சர்க்கார்’ போன்ற வெற்றித் திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார் ஏ. ஆர். முருகதாஸ். சமூக பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி ஆக்ஷன் திரைப்படங்களை எடுப்பதில் பிரபலமானவர் ஏ. ஆர். முருகதாஸ்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ஏ. ஆர். முருகதாஸ் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், ‘தீனா’ கதையை எழுதிவிட்டு கையில் வைத்துக் கொண்டு வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்தேன். என் உருவத்தைத் பார்த்து பொடிப்பையன் அப்படினு ஒதிக்கினாங்க. அப்போது எஸ். ஜே. சூர்யா வாயிலாக அஜித் சாரிடம் தீனா கதையை சொல்ல வாய்ப்புக் கிடைத்தது. அஜித் சார் கதையை கேட்டுட்டு அவருக்கு பிடிச்சு போய் 1000 ரூபாயை என் கையில் கொடுத்துட்டு இந்தப் படம் பன்றோம் அப்படினு சொன்னார். அதுதான் என்னுடைய முதல் சம்பளம். அஜித் சார் கையால வாங்கின அந்த 1000 ருபாய் இன்னும் அவர் நியாபகமா என் வீட்டில இருக்கு என்று எமோஷனலாக பேசியுள்ளார் ஏ. ஆர். முருகதாஸ்.