முதல்ல கத்துக்க வேண்டியதை கத்துக்கோங்க! அனிருத் பற்றி பேசிய கமலுக்கு தக்க பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்..

சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் தயாராகி இருக்கும் மிக பிரம்மாண்ட திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக உள்ளது. ட்ரெய்லருக்காக உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு காரணம் இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியின் பாதிப்பு தான். அதன் இரண்டாம் பாகமும் இப்போதுள்ள அரசியல் சூழலுக்கு ஏற்ப எந்த வகையில் படமாக்கி இருக்கிறார் சங்கர் என்பதன் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் ஆர்வத்திற்கு காரணமாக இருக்கின்றன.

படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். படத்தின் முதல் இரண்டு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றன. இருந்தாலும் இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் ஏ ஆர் ரகுமானின் இசை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த அளவு இரண்டாம் பாகத்தில் ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் கமல் அனிருத்தை பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்து இருந்தார். அதாவது எந்த ஒரு செயலை செய்தாலும் 100% பெஸ்ட்டை கொடுக்க வேண்டும் என சொல்வார்கள்.

என்னிடம் அதை எதிர்பார்த்தால் கண்டிப்பாக நடக்காது. மாறி மாறி ஒரு விஷயத்தை இன்னும் கொஞ்சம் வேண்டும் இன்னும் கொஞ்சம் வேண்டும் என கேட்கும் போது இவ்வளவுதான் என்னால் முடியும் என்றுதான் நான் சொல்வேன்.

ஆனால் அனிருத்திடம் இந்த ஒரு வார்த்தையை நாம் எதிர்பார்க்கவே முடியாது. இதைத்தான் நான் அவரிடம் இருந்தது கற்றுக்கொள்ள விரும்புகிறேன். நாம் கேட்க கேட்க அவர் அவருடைய 100% பெஸ்டை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார் என கமல் கூறினார்.

இன்னொரு பக்கம் இன்று காலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்ற போது படக்குழுவினரிடம் பத்திரிகையாளர் ஒருவர் ‘இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வில்லை என்றும் ஒரு தண்ணீர் பாட்டில் கூட எங்களுக்கு கொடுக்கவில்லை ‘என்றும் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்தனர்.

அதற்கு கமலும் சரி சங்கரும் சரி அமைதியாகவே இருந்தார்கள். அதன் பிறகு தொகுப்பாளினி ஒருவர் குறிக்கிட்டு படத்தை மட்டும் பற்றி கேள்விகளை கேட்கவும் என சொல்லிவிட்டு அதை அப்படியே ஆப் செய்து விட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள் கமலை வறுத்தெடுத்து வருகின்றனர். எதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டுமோ அதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள் ஆண்டவரே என கமெண்ட்களை தெரிக்க விடுகின்றனர்.