சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான ஏழு கடல் ஏழு மலை திரைப்படம்.. இயக்குநர் ராமுக்கு கிடைத்த அங்கீகாரம்

By John A

Published:

இயக்குநர் பாலுமகேந்திராவிடமிருந்து சினிமா பாடம் கற்றவர்கள் எந்த விதத்திலும் சோடை போனதில்லை. கமர்ஷியல் படங்களைக் காட்டிலும் ஒரு சினிமா என்றால் எப்படி இருக்க வேண்டும்.. மனித உணர்வுகளைப் பேசக் கூடிய படங்களை எடுப்பது என்ற வித்தையை பாலுமகேந்திராவின் பட்டறையில் கற்றுத் தேறியவர்கள் பலர். அவற்றில் இயக்குநர் பாலா, வெற்றி மாறன், ராம் போன்ற முன்னணி இயக்குநர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் இயக்கிய படங்கள் அனைத்துமே ஒன்றைக் கவனித்தோம் என்றால் கமர்ஷியலுக்கு இரண்டாவது இடம் தான்.

தரமான கதைக் களமும், ஒளியும், கதாபாத்தித் தேர்வும் தான் இவர்களது படங்கள் என்றாலே அதற்கென தனி ரசிகர்கள் உருவாகிவிடுகிறார்கள். முன்னனி நடிகர்களைக் கூட தங்களது படங்களில் அவர்களின் நடிப்புத் அத்தனையையும் வெளிக்கொணர்ந்து விடுவர். இவர்களுள் இயக்குநர் ராம் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களுக்குப் பிறகு தற்போது இயக்கியிருக்கும் திரைப்படம் தான் ஏழு கடல் ஏழு மலை.

நடிகர் ஜெய்க்குப் பின்னால இப்படி ஒரு இசைக் குடும்பமா? யாரும் அறியா ஜெய்யின் மறுபக்கம்..

மலையாள நடிகரான நிவின் பாலி ஹீரோவாகவும், அஞ்சலி ஹீரோயினாகவும் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான சூழலில் தற்போது சர்வதேச திரைப்பட விழாவிற்கும் தேர்வாகியுள்ளது. ரொமேனியாவின் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடத் தேர்வாகியுள்ளது. கற்றது தமிழ் படத்தில் தமிழ் படித்தவர்களின் நிலையையும், காதலின் ஆழத்தையும் உணர்த்திய ராம் இந்தப் படத்திலும் காதலையை மையப்படுத்தியே இயக்கியிருக்கிறார்.

தற்போது முன்னனி ஹீரோவாக வலம் வரும் சூரி இந்தப் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படம் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா போன்ற திரைப்பட விழாக்களிலும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.