கழுதையை நம்பி களத்தில் இறங்கிய மாரி செல்வராஜ் : ஒர்க் அவுட் ஆன சூப்பர் சீன்

கற்றது தமிழ், பேரன்பு, தரமணி, தங்க மீன்கள் என முத்தான படங்களைத் தந்த இயக்குநர் ராமின் மாணவரான மாரி செல்வராஜ் தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தார். பரியேறும் பெருமாள் என்ற படத்தில் விளிம்பு நிலை மக்களையும், அவர்கள் சாதியால் அனுபவிக்கும் கொடுமைகளையும் பதிவு செய்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பல்வேறு விருதுகளை அள்ளிக் கொடுத்தது இப்படம். இயக்குநர் பா.ரஞ்சித் வரிசையில் இவரும் சேர்ந்து விட்டார் என்று நினைக்கையில் அடுத்த படமே தனுஷுடன் அமைய கர்ணன் படத்தில் கவனிக்க வைத்தார்.

மாஸ் ஹீரோவுக்ககான எந்த அடையாளமும் இல்லாமல் ஒரு ஊரின் அடிமைத்தனத்தை தனது புரட்சியால் நீக்கும் வாலிபனாக தனுஷ் இதில் வாழ்ந்திருப்பார்.  படத்தில் தனுஷுடன் முக்கியமாக நடித்தது கழுதை. படத்தின் திருப்புமுனைக்கு இந்தக் கழுதைக் காட்சிதான் விசிலடிக்க வைத்தது.

அதன்படி கழுதை மலையேறும் காட்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் குழம்பிப் போனாராம். எப்படி இது மலையேறும் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில்  தெய்வமாக வரும் அந்த சிறுமியை மலையில் நிற்க வைக்க கழுதை தானாகவே அதைப் பார்த்து மலையேற ஆரம்பித்ததாம். பின்னர் சிறுமி அருகில் நிற்க கழுதை மேல் கையை வைக்கச் சொன்னாராம். இப்படியாக அந்தக் காட்சி ஒர்க்அவுட் ஆக இதுவரை தான் எடுத்ததில் பிடித்த காட்சி என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

29 வயதில் முடிந்து போன வாழ்க்கை… ஆனால் பட்டை தீட்டி ஒளிரச் செய்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்!

பெரும்பாலும் தான் இயக்கிய படங்களில் விலங்குகளில் கூட சாதி பார்க்கும் நடைமுறையைக் காண்பித்து அவையும் ஒர் உயிர்தான் என்பதை சுட்டிக் காட்டியிருப்பார். உதாரணமாக பரியேறும் பெருமாளில் நாய், கர்ணன் படத்தில் பன்றிகளும், கழுதையும் மாமன்னன் படத்தில் பன்றிகள் என காட்சிப்படுத்தியிருப்பார். மாமன்னன் பட வெற்றி இவரை முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடிக்க வைத்தது. மேலும் வடிவேலுவுக்கும் தரமான ரீ-என்ட்ரி கொடுத்தது இப்படம்.

தற்போது வாழை என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இதில் சிறுவர்கள் நடிக்க அவர்களுடன் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் பிரியங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.